
காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரிப்பு…
உணவு குறித்த செய்திகளின் தொகுப்பு
சுவாரஸ்யமான செய்திகளின் ஹைலைட்
பிற தளங்களில் வெளியான செய்திகள்
சிங்கப்பூர் தெரு உணவுகளில் ஒன்றாக பிரியாணி தேர்வு
சிங்கப்பூரில் ஸ்ட்ரீட் ஃபுட் எனப்படும் தெரு உணவுகள் மிகவும் பிரசித்தம். தெரு உணவகங்களுக்கு அந்த நாட்டின் அரசே பல வசதிகளை செய்து கொடுத்துள்ளது. குறிப்பாக தெரு உணவகங்களுக்கு பைப் மூலம் கேஸ் விநியோகம் செய்யப்படுகிறது.
Must Read: ஆப்பத்துக்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்
தெரு உணவகங்கள், தெரு உணவு வகைகளை பிரபலப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் போட்டி நடத்துகிறது. அந்த வகையில் சிட்டி ஹாக்கர் ஃபுட் ஹன்ட் என்ற போட்டி 13 வது ஆண்டாக நடத்தப்பட்டது. இந்த போட்டியில் மிகவும் பிரசித்த பெற்ற 12 உணவுகள் தேர்வு ஆகி இருக்கின்றன. அதில் பிரியாணி மற்றும் இந்தியாவின் சைவ உணவான இந்திய ரோஜாக் என்ற உணவும் தேர்வாகி உள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை காணவும்
அசைவ உணவு விநியோகித்த உணவகத்துக்கு அபராதம்
அசைவ உணவுப் பொருட்களை தவறாக விநியோகித்த உணவகம், வாடிக்கையாளருக்கு 15,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு சண்டிகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ரூ.20,000 வழக்கை செலவை செலுத்துமாறும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது,
2021ம் ஆண்டு ஜொமாட்டோ செயலி மூலம் சண்டிகரில் உள்ள கல்சாங் உணவகத்தில் சைவ உணவுகளை ஆர்டர் செய்த சுதீப் கோயல் என்பவருக்கு அசைவ உணவுகள் அனுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கில்தான் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை காணவும்
எளியவர்களுக்கு உணவு வழங்கிய செஞ்சிலுவை சங்கம்
இந்திய செஞ்சிலுவை சங்கம் புதுச்சேரி கிளை சார்பில் சாலையோரம் வசிப்போருக்கு உணவு வழங்கப்பட்டது. தீபாவளி பண்டிகையொட்டி நகரில் உள்ள பெரும்பலான ஓட்டல்கள் மூடப்பட்டு இருந்தது. ஓட்டல்கள் இயங்காததால் சாலையோரம் வசிக்கும் மக்கள், கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து புதுச்சேரி செஞ்சிலுவை சங்கம் சார்பில் தெருவோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்கவும்.
அன்னதானம் வழங்க முன் அனுமதி அவசியம்
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக வரும் 26ம் தேதி மகா தீபம் ஏற்றப்படும். விழாவை காண தமிழ்நாடு முழுவதும் இருந்து பல லட்சகணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவர். பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள், தனிநபர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்படும். அன்னதானம் வழங்குவோர் முன் அனுமதி பெற வேண்டும்.
www.foscos gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்து மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். அன்னதானம் வழங்க விரும்புவோர், திருவண்ணாமலை செங்கம் சாலை, பழைய அரசு மருத்துவமனையில் இயங்கும் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பத்தை அளித்து அனுமதி பெற வேண்டும். மேலும் விவரங்களுக்கு இந்த இணையதள இணைப்பை பார்க்கவும்.
மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. 1543 பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது.
இரண்டாம் கட்டமாக கடந்த ஆகஸ்ட் 25 ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,008 பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5 -ம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதனால் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளதாக சமூக நலத்துறையே சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்து படிக்கவும்.
#foodnews #foodnewsontamil #Tamilnews #foodnewshighlights
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments