சமசீரான உணவை உட்கொள்வது எப்படி தெரியுமா?


முன் எப்போதையும் விட இந்த கொரோனா காலத்தில் உணவின் மீது மக்களுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.  மூன்று நேரமும் உணவகங்களில், ரெஸ்டாரெண்ட்கள், மெஸ்களில் உணவு சாப்பிட்டவர்கள் இப்போது பொது ஊரடங்கால் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். வீட்டு உணவின் ருசியையும் இப்போது உணரத் தொடங்கி இருக்கின்றனர்.

வீட்டிலோ, வெளியிலோ சமச்சீரான உணவை எடுத்துக் கொள்வது முக்கியம் என்று மருத்துவர்கள் நமக்கு அறிவுறுத்துகின்றனர்.  உடலுக்குத் தேவையான  கனிமங்கள், வைட்டமின்கள், நார்சத்து, கொழுப்பு சத்து, புரதம், மாவு சத்து ஆகியவை அடங்கிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

புரதம் தரும் உணவுகள்

இறைச்சி வகைகளில் அதிகமாக புரதசத்து உள்ளது. குறிப்பாக மீன்,நண்டு, இறால் போன்ற கடல் உணவுகள், கோழி, ஆடு இறைச்சிகளிலும், முட்டையிலும் புரதம் மற்றும் இரும்பு சத்துகள் உள்ளன. தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம் மீன் அல்ல ஏதேனும் ஒரு இறைச்சியை 50 கிராம் முதல் 100கிராம் வரை நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டியது முக்கியம்.

புரத த்துடன் நார் சத்து தரும் உணவுகள்

துவரம்பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள், சுண்டல், பாதாம் பருப்பு, வேர்கடலை ஆகியவற்றில் நமது உடலுக்குத் தேவையான நார்சத்து, புரத சத்து இரண்டும் இருக்கின்றன.  பருப்பு, சாம்பார் சாதம், நட்ஸ் வகைகள் எனப்படும் பாதம் பருப்பு மூன்றையும் சம விகிதத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

நார்சத்து உள்ள பொருட்கள்

நாம் தினமும் சாப்பிடும் நெல் அரிசி சாதம், கோதுமை மாவால் செய்யப்பட்ட சப்பாத்தி, அரிசியால் செய்யப்படும் இட்லி, தோசை போன்ற உணவு வகைகளில் நார்சத்து அதிகம் உள்ளன. இவைதவிர ஓட்ஸ், ராகி போன்றவற்றிலும் நார்சத்துகள் உள்ளன. நீங்கள் மதியம் பாதியளவு சாதம், ஒரு சப்பாத்தி, ஒரு இட்லி, ஒரு தோசை, பொங்கல் அல்லது உப்புமா ஆகியவற்றை சாப்பிடலாம் .

கால்சியம்  நிறைந்த உணவுப் பொருட்கள்

பால், தயிர், மோர் ஆகியவற்றில் புரதம், கால்சியம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. ஒரு நாளைக்கு 100 மில்லி பால் அல்லது தயிர் உட்கொள்ளலாம். தயிரை விடவும் மோராக மாற்றிக் குடிப்பது மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வைட்டமின் நிறைந்த உணவுகள்

காய்கறிகள், பழங்களில்  நம் உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும் , தாது உப்புகளும் உள்ளன. இரும்பு, பொட்டாசியம், நார் சத்து ஆகியவையும் காய்கறிகளில் உள்ளன. ஒரு ஆப்பிள் அல்லது கொய்யா பழம், ஒரு வாழைப்பழம், ஆரஞ்ச், ஒரு கப் காய்கறிகள் சாலட் எடுத்துக்கொள்ளலாம்.  

 

 


Comments


View More

Leave a Comments