கீரைகளின் முக்கியத்துவத்தை சொல்லும் கீரை மருத்துவமனை புத்தகம்…
அரசு சித்தமருத்துவர் திரு.மருத்துவர்.வி.விக்ரம்குமாரின் ‘கீரை மருத்துவமனை’ அடுத்த குறுநூலினை ரூ.20 விலையில் காக்கைக் கூடு பதிப்பகம் வெளியிடுகிறது! இந்த சிறிய நூலில் கீரைகள் குறித்த அறிமுகம், கீரைகளின் முக்கியத்துவம் குறித்து வழக்கமான பாணியில் மருத்துவர் விக்ரம்குமார் சுவைபட சொல்லியிருக்கிறார்.
Must Read: இயற்கை வேளாண் சந்தை..
இந்தக் கீரை மருத்துவமனைக்குள் நுழைந்து நீங்கள் பல தகவல்களை அறிந்துகொள்ளலாம். குறுநூலைப் பெற காக்கைக் கூடு பதிப்பகத்தின் 9043605144 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
திருமண நிகழ்வுகள் அல்லது நண்பர்களுக்குப் பரிசளிக்கும் விதமாக இந்தக் குறுநூலைப் பயன்படுத்தலாம். அட்டைப் பட கோட்டோவியத்தை மருத்துவர் விக்ரம்குமாரின் மனைவி திவ்ய சுபத்ர வரைந்திருக்கிறார். அழகான குறுநூலாக சக்தி அவர்கள் வடிவமைத்திருக்கிறார். காக்கைக் கூடு திரு.செழியன் வழக்கம்போல அருமையான நூலை கொண்டு வந்திருக்கிறார். கீரை மருத்துவமனை… பசுமையான அனுபவத்தைக் கொடுக்கும் என மரு.வி.விக்ரம்குமார்.,MD(S) முகநூல் பதிவில் உறுதிபட கூறுகிறார்.
#BookForKerrai #HealthyKerrai #HealthyGreens #DetailsOfKeeraiVarieties
Comments