அரிசி சாதம், சோயா புலவ், சோயாபீன்ஸ், பன்னீர், அல்வா இவ்வளவும் ஒரு ரூபாய் என்றால் நம்ம முடிகிறதா?


ஒரு ரூபாய்க்கு தேன் மிட்டாய் தவிர வேறு எதுவும் வாங்க முடியாது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். அப்படி நாம் நினைத்து கொண்டிருந்தால் அது தவறு என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். 
தேசத்தின் தலைநகரான டெல்லியில் ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் உன்னதப்பணியை செய்து வருகிறார் 51 வயதாகும் பிரவீன் குமார் கோயல் என்ற நபர். கடந்த நான்கு மாதங்களாக இந்த உணவகத்தை நடத்தி வருகிறார். தினமும் ஆயிரம் பேர் வரை தலா ஒரு ரூபாய்க்கு உணவு வழங்குகிறார். பார்சல் உணவும் தருகிறார். தமக்கு சிலர் பணம் கொடுத்து உதவுவதால் இதனை செய்ய முடிகிறது என்று சொல்கிறார். முன்பு 10 ரூபாய்க்கு உணவு கொடுத்து வந்தார். ஆனால், ஒரு ரூபாயாக விலையை குறைத்து விட்டார். இவரைப்பற்றி சமூக வலைதளங்களில் வந்த தகவல்கள் காரணமாகவும், ஒரு செய்தி நிறுவனத்தில் வந்த செய்தியாலும் இப்போது பலர் இங்கு உணவு உண்ண வருகின்றனர். டெல்லியில் உள்ள ரிக்ஷா தொழிலாளர்கள், ஏழை, எளியவர்கள் இவர் உணவகத்தை நாடி வந்து உண்கின்றனர். 
உணவு உண்ண வருபவர்கள் தவிர நிதி உதவி செய்பவர்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகரித்திருக்கிறது. தம்முடன் 7 பணியாளர்களை வைத்திருக்கும் அவர், அவர்களுக்கு ரூ.300 முதல் ரூ.400 சம்பளம் வரை தருகிறார். அவர் உணவகம் நடத்துவதற்காக ரஜீத் சிங் என்ற வணிகர் இடம் கொடுத்து உதவுகிறார். ஒரு ரூபாய்க்கு அவர் கொடுக்கும் உணவின் மெனுவில் அரிசி சாதம், சோயா புலவ், சோயாபீன்ஸ், பன்னீர், அல்வா ஆகியவை இடம் பெறுகின்றன. பருவத்துக்கு ஏற்றார் போல காய்கறிகள் அடிக்கடிமாறும். மற்றபடி விலையில் எந்த மாற்றமும் இருக்காது. காலையில் தேநீர் ஒரு ரூபாய்க்குத்தான் இவர் விற்கிறார். 
-பா.கனீஸ்வரி


Comments


View More

Leave a Comments