நெஸ்லே உணவு பொருட்கள் தரமானவையா?
நெஸ்லே தனது முக்கிய உணவு மற்றும் பான தயாரிப்புகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவை “அங்கீகரிக்கப்பட்ட ஆரோக்கிய வரையறையை” பூர்த்தி செய்யவில்லை என்பதையும், சில பிரிவுகள் மற்றும் தயாரிப்புகள் எவ்வளவு “புதுப்பித்தாலும்” “ஒருபோதும் ஆரோக்கியமாக இருக்காது” என்பதையும் தனது ஆராய்ச்சி குறித்த ஆவணத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.
இது குறித்து பைனான்சியல் டைம்ஸ் ஆங்கில நாளிதழ் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய உணவு நிறுவனங்களில் ஒன்றான நெஸ்லே ஆய்வின்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் உயர் அதிகாரிகளிடையே மட்டும் சுற்றுக்கு விடப்பட்ட ஒரு ரகசிய ஆவணத்தில் உணவு மற்றும் பானங்களில் வருவாய் அடிப்படையில் 37 சதவீத தயாரிப்புகள் மட்டுமே ( செல்ல பிராணிகளுக்கான உணவு மற்றும் சிறப்பு மருத்துவ ஊட்டச்சத்து போன்ற தயாரிப்புகளைத் தவிர்த்து) பிற பொருட்கள் ஆஸ்திரேலியாவின் ஹெல்த் ஸ்டார் மதிப்பீட்டு முறையில் 3.5 க்கும் அதிகமான மதிப்பீட்டை மட்டுமே பெற்றுள்ளது.
கிட்கேட், மேகி நூடுல்ஸ், நெஸ்காஃப் ஆகியவற்றின் உற்பத்தியாளரான நெஸ்லே 3.5 மதிப்பீட்டை “ஆரோக்கியத்தின் அங்கீகரிக்கப்பட்ட வரையறை” என்று விவரிக்கிறது.
ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தியின்படி , அதன் ஒட்டுமொத்த உணவு மற்றும் பான பிரிவில், 70 சதவீத உணவுப் பொருட்கள் ஆரோக்கியத்தின் அங்கீகரிக்கப்பட்ட வரையறைக்குள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதோடு 96 சதவீத பானங்கள் - (தூய காபியைத் தவிர்த்து) மற்றும் 99 சதவீத மிட்டாய் மற்றும் ஐஸ்கிரீம் பொருட்களும் இந்த வரையறைக்குள் இல்லை என்பது கூடுதல் அதிர்ச்சி தகவல்
எனினும், குடிநீர் மற்றும் பால் பொருட்கள் 82 சதவிகிதமும் குடிநீரில் 60 சதவிகிதமும் ஆரோக்கியத்தின் வரையறைக்குள் உள்ளன என்பது தெரியவந்துள்ளது. .
இதையும் படியுங்கள்; எப்போதும் பசியுடன் இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்
குழந்தைகளுக்கான உணவு, செல்லப்பிராணிகளுக்கான உணவு, காபி ஆகியவை இந்த இந்த ஆய்வில் சேர்க்கப்படவில்லை. உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதற்கும் ஆரோக்கியமான உணவை ஊக்குவிப்பதற்கும் உலகளாவிய உந்துதல் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தியின் தற்போதைய தகவலின் படி, நெஸ்லே இப்போது வெளியிட்ட ஒரு அறிக்கையில் தனது ஊட்டச்சத்து மற்றும் சுகாதார உத்தியை புதுப்பிக்க ஒரு "நிறுவன அளவிலான திட்டத்தில்" செயல்பட்டு வருவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தயாரிப்புகள் "மக்களின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய" உதவியுள்ளதா என்பதை உறுதிப்படுத்த தங்களது தயாரிப்புகளை முழுமையாக பரிசோதிக்க உள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளில் நெஸ்லே தயாரிப்புகளில் சர்க்கரை மற்றும் சோடியம் சுமார் 14-15 சதவிகிதம் குறைத்துள்ள நிலையில், தயாரிப்புகளை ஆரோக்கியமாக மாற்றுவதற்கான முயற்சிகளில் இது தொடரும் என்று நெஸ்லே நிறுவனம் உறுதி கூறியுள்ளது.
-பா.கனீஸ்வரி
#NestleFoods #NestleProducts #NestleReport #NestleIntenalReport
Comments