
கொரோனா தொற்று சிகிச்சைக்காக புதுபிக்கப்பட்ட திருப்பத்தூர் சித்த மருத்துவமனை
கொரோனா தொற்று முதல் அலையின்போது திருப்பத்தூரில் அரசின் சித்தமருத்துவமையத்தில் மிகச்சிறப்பான சிகிச்சை தரப்பட்டது. இயற்கை வாழ்வியலோடு இணைந்த சிகிச்சை முறைகளால் பெரும்பாலான கொரோனா நோயாளிகள் விரைவில் குணம் பெற்று வீடு திரும்பினர். இப்போது மீண்டும் புதிய பரிமாணத்தில் திருப்பத்தூர் சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் செயல்படுகிறது.
பாரம்பரிய மண்பானை மருந்தகம், நிலாச்சோறு, எட்டு வடிவ வர்ம நடை மேடை, நூலகம், விழிப்புணர்வு உரை, சித்த மருத்துவ யோகா முறைகள், மூலிகை தூபம், மூலிகைப் பந்தல் போன்ற மேலும் பல விஷயங்களை உள்ளடக்கியதாக திகழ்கிறது.
இந்த சித்தமருத்துவமனையைப் பற்றித் தெரிந்துக் கொள்ள இந்த யுடியூப் காணொளியை ரசிக்கலாம்.
https://www.youtube.com/watch?v=3asmkSeSDRY
வீடியோ உதவி நன்றி; மரு.வி.விக்ரம் குமார்
#TirupatturGovernmentSiddhaHospital #TirupatturSiddhaHospital
Comments