ஆற்காடு மக்கன்பேடாவை சுவைக்க மறக்காதீர்கள்
மக்கன் பேடா கிட்டத்தட்ட பாதுஷா போலவே இருக்கும் நன்கு ஜீராவில் மூழ்கி இருக்கும். எங்கள் கடை ஸ்வீட் ஸ்டாலில் நடிகர் நாகேஷின் முகம் போல அம்மைத் தழும்பு தாங்கி மொர மொரப்பாய் ஜீராவில் ஊறி சுவைக்க அருமையாக இருக்கும்! நான் சொன்னது வட இந்திய ஸ்டைல் மக்கன் பேடா! ஆற்காடு மக்கன் பேடா வேறு.!
மதுரைக் காரர்களுக்கு புரியும்படி சொன்னால் மதுரை பால்பன் சாப்பிட்டது போல இருக்கும். எப்படி பாம்பே அல்வாவுக்கும் திருநெல்வேலி அல்வாவுக்கும் வித்யாசம் இருக்கிறதோ அதே அளவு வித்யாசம் ஆற்காடு மக்கன் பேடாவுக்கு உண்டு.முதன் முதலில் ஆம்பூரில் இதைப் பார்த்ததும் காலா ஜாமூன் என்றே நினைத்தேன். காலா ஜாமூன் குலாப் ஜாமுனின் பெரியப்பா.!
Must Read: தமிழ்நாட்டில் அதிகம் அறியப்படாத சுவை மிக்க உணவகங்கள்…
அதே குலாப் ஜாமூன் சுவை! ஆனால் இதில் தயிர் கலந்து இருக்கும்.! கறுப்பான ஜாமூன் மேலே முந்திரி தூவி தருவார்கள் ஒரு ஜாமுனே டென்னிஸ் பந்தை விட கொஞ்சம் சிறியதாக இருக்கும் இதுவே காலா ஜாமூன்.. முதலில் அந்த மக்கன் பேடாவை காலா ஜாமூன் என்றே நினைத்தேன் ஆனால் இது பொன்னிறத்தில் குலாப் ஜாமூனின் ப்ரவுன் கலரில் மதுரை பால் பன்னின் வடிவிலேயே இருந்தது!
இதைப் போய் மக்கன் பேடா என்கிறார்களே! நாம் பார்த்த மக்கன் பேடா வேறே என்னும் சந்தேகம் இருந்தது.. உடன் வந்த நண்பர் அட ஒண்ணு சாப்பிட்டு பாருங்க நிச்சயம் இன்னும் ஒண்ணு சாப்பிடுவிங்க என்றார் ப்ரீத்திக்கு நான் கேரண்டி போல.! அரைமனதாக எடுத்து முதல் கடியிலேயே பாகும் பருப்பும் தெளிதேன் மூன்றும் என் நாவில் பாயக்கண்டேன்! மைதாவுடன் பாலில் எடுத்த கோவாவும்..
சேர்த்து செய்திருக்கிறார்கள் என்பது சுவையில் தெரிந்தது! அதிகம் கடிக்க வேண்டிய அவசியமே இன்றி நன்கு பாகில் ஊறி உள்ளே முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட், உலர் திராட்சை என அதகளமான ருசியில் இருந்தது இந்த மக்கன்பேடா.! அந்நியன் படத்தில் வரும் அம்பி, ரெமோ, அந்நியன் என 3 வேடங்களில் பால் பன், ஜாமூன், பேடா மூன்றின் கலவையான ருசியை ஆற்காடு மக்கன்பேடாவில்..
Must Read:கோவையில் மற்றுமொரு பசி போக்கும் உணவுப்புரட்சி
அறிந்தேன்! வட இந்திய மக்கன் பேடாவை சுவைத்ததற்கும் இதற்கும் உள்ள அனுபவமே வேறு. அதிலும் ஆற்காடு செட்டியார் கடை மக்கன்பேடா உலகபிரசித்தம் என்று சொன்னார்கள். 140 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது.. ஆற்காடு நவாபின் நாவையே அடிமையாக்கி அதற்கு சலாம் போட வைத்த பெருமையுடையது என்றனர். நிச்சயம் ஆற்காடு பகுதிகளுக்கு சென்றால் பிரியாணி மட்டுமல்ல..
செட்டியார் கடை மக்கன் பேடாவையும் சுவைக்க மறக்காதீர்கள்.. இப்போது அதை நினைத்தாலும் என் நாவின் ருசி மொட்டுகள் குபீரென எழுந்து ஒரு சல்யூட் அடிக்கும்.. மென்மையான கோவாவில் உலர் பருப்புகளின் சுவையோடு இனிய பாகும் சேர்ந்து உங்களுக்கு ஓர் அற்புதச் சுவையான சுகானுபவத்தை தரும்.!
நன்றி; வெங்கடேஷ் முகநூல் பதிவு
#ArcotMakanbeda #Makanbeda #nativefoods
TRENDING; மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்கு, தேன்சாப்பிடும் முறை
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments