
கோவையில் வரும் 30ஆம் தேதி கிழங்கு திருவிழா…
கோவையில் பாரம்பரிய கிழங்கு திருவிழா வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் இந்த பட்டத்தில் என்னோட கனவுத் தோட்டத்தில் அறுவடை செய்த பாரம்பரிய கிழங்கு வகைகள், மஞ்சள் ரகங்களைக் கொண்டு ஒரு சின்ன கண்காட்சி மாதிரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை, அதை சுற்றி இருக்கிற நண்பர்களுக்கு கொடுக்கலாம் என்று இந்த கண்காட்சியை திட்டமிட்டு இருக்கிறோம்.
கண்காட்சி பற்றிய விவரங்களுக்கு இதில் நான் கொடுத்திருக்கும் போஸ்டரை பாருங்க. அடுத்த ஞாயிற்றுக்கிழமை (30-ஏப்ரல்) இங்கே கோவை குரும்பபாளையத்தில் நற்றிணை இயற்கை அங்காடியில் நமது பாரம்பரிய கிழங்கு கண்காட்சி நடக்க இருக்குது. இது முழுக்க என்னோட திட்டமிடலில், நம்ம தோட்டத்தில் அறுவடை செய்த கிழங்கு வகைகளை வைத்து நடத்த இருக்கிறேன்.
Must Read: நோயுற்ற கால்நடைகளின் புகைப்படங்களை தொகுக்க அக்ரி சக்திக்கு கைகொடுங்கள்..
ஒவ்வொரு கிழங்கையும் எப்படி சமைக்கலாம் என்கிற விவரங்களும், முடிந்தால் சில கிழங்கு வகை சமையலும் ருசிக்க கண்காட்சியில் வைக்கலாம் என்று இருக்கிறேன். பாரம்பரிய விதைகளையும் இந்த கண்காட்சியில் கிடைக்க செய்யலாம் என்று நண்பர் உழவர் ஆனந்தும் என்னோடு இணைக்கிறார். அவரது ஸ்டாலும் கண்காட்சியில் உண்டு.
நண்பர்கள் உங்கள் ஆதரவை கொடுங்க. கண்டிப்பா வாங்க. பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு மாதிரி கோவையை சுற்றி இருக்கிற நண்பர்களும் கண்டிப்பா வாங்க. தொலை தூரத்தில் இருக்கும் நண்பர்களும் முடிந்தால் கண்டிப்பா வாங்க. அனுமதி இலவசம்.
ராசவள்ளி, பெருவள்ளி, சிறுவள்ளி, கரு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள் என்று நிறைய வகைகள் விதை கிழங்காகவே கிடைக்கும். கண்காட்சிக்கு வர திட்டமிடும் நண்பர்கள் கீழே லிங்க்ல உள்ள Google Form ல உங்கள் விவரங்களை கொடுத்தால் எத்தனை நண்பர்கள் வருகிறார்கள் என்று தெரிந்து கொள்வேன். சில திட்டமிடலுக்கு இந்த விவரங்கள் வசதியா இருக்கும்.
முடிந்தால் ஒரு வாட்ஸ் ஆப் குழு ஆரம்பித்து கண்காட்சி பற்றி பேசலாம். கண்காட்சிக்கு வர Google Form நிரப்ப வேண்டும் என்று கட்டாயம் இல்லை. Registration மாதிரி எதுவும் இல்லை. எல்லோருமே நேரடியா வரலாம். https://forms.gle/VQi3Pw1eh3XHVG8m8 என்னோட ஒரு சின்ன முயற்சி இது. நிறைய விஷயங்கள் இந்த கண்காட்சியில் செய்து பார்க்கலாம் என்று இருக்கிறேன்.
நண்பர்கள் விருப்பப்பட்டால் கண்காட்சி முடிந்ததும் ஒரு 3 மணி அளவில் கிழங்கு வளர்ப்பு பற்றி ஒரு கலந்துரையாடல் திட்டமிடலாம் என்று இருக்கிறேன். நண்பர்கள் ஆதரவில் கோவையிலும் பாரம்பரிய கிழங்கு வகைகளை பரவலாக்கம் செய்ய இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
#roots #tuberfestival #agrieventsatkovai
Comments