பொடுகை விரட்ட... சில யோசனைகள்!
இன்றைக்கு பெரும்பாலான பெண்களுக்கு தலையாய பிரச்னையாக இருக்கக்கூடியது தலைப்பொடுகு மற்றும் நரைமுடி. இவற்றைக்களைய கடை கடையாய் ஏறி இறங்கி, கண்ட கண்ட ஷாம்பு - லோஷன்களை வாங்கித்தேய்த்து, டாக்டர்கள் அறிவுரை கேட்டு என்னவெல்லாமோ செய்தும் என்ன பலனும் ஏற்படுவதில்லை;
ஆனால் பக்கவிளைவுக்கு மட்டும் பஞ்சமில்லை. பிரேசிலில் உள்ள அமேசான் காடு மற்றும் அயர்லாந்து காடு, ஆப்பிரிக்க காடுகள் போன்றவற்றில் விளையக்கூடிய அரிய வகை மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்டவை என்று சொன்னதை நம்பி அதிக விலை கொடுத்து வாங்கி தலையில் தேய்த்து ‘உள்ளதும் போனதுதான் மிச்சம்.
Must Watch: சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க நித்தியகல்யாணி மூலிகை…
இவை எல்லாம் ஒருபுறம் இருக்க எளிதில் நாமே செய்யக்கூடிய இயற்கை வைத்திய முறைகளின்மூலம் பொடுகை விரட்டுவதோடு நரை முடியை கருமையாக்க முடியும்.
பொதுவாக, நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கக்கூடிய வசம்பை இடித்து தேங்காய் எண்ணெயில் ஊறப்போட்டு தலையில் தேய்த்து வந்தால் நாளடைவில் பொடுகு சரியாகும். அதேபோல், பசலைக்கீரையை மையாக அரைத்து தொடர்ந்து 3 நாட்கள் தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு சரியாகும்.
நல்லெண்ணெயுடன் வேப்பம்பூ, வெல்லம் போன்றவற்றை சேர்த்து காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வந்தாலும் நாளடைவில் பொடுகு உதிர்ந்து போய்விடும். மேலும் அரை கப் தேங்காய்ப்பாலை 4 டேபிள்ஸ்பூன் எலுமிச்சம்பழச்சாறுடன் கலந்து வாரம் ஒருநாள் தலைக்கு தேய்த்து குளித்து வந்தாலும் பொடுகு சரியாகும்.
வில்வக்காயை பொடியாக்கி சம அளவு சீயக்காய்த்தூள் சேர்த்து தினமும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் சில நாட்களில் பொடுகு உதிர்ந்து போய்விடும். சாம்பார் வெங்காயத்தை மையாக அரைத்து அதனுடன் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து வெந்நீரில் குளித்துவந்தால் பொடுகு பறந்துபோகும்.
-எம்.மரியபெல்சின், மொபைல் நம்பர்; 9551486617
#dandruff #howtocleardandruff #dandruffremedy
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments