12ம் தேதி காந்திக்கிராமத்தில் இயற்கை வேளாண்மை உரைக்கோவைகள்
ஒவ்வொரு நாளும் வளர்ந்து வரும் துறையாக இயற்கை வேளாண்மையும், இயற்கை வாழ்வியல் கூறுகளும் பெருகி வருகின்றன. இயற்கை வேளாண்மையை அதன் அடிப்படையான அறவியல், அறிவியல் நோக்கில் அணுக வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
இதில் ஆர்வமான பலரும், இரண்டு நாள் களப்பயிற்சியில் கலந்து கொள்ள இயலாத நிலையைக் கூறி வருகின்றனர். ஒரு நாள் வேண்டும் என்கின்றனர். ஆனால் களப் பயிற்சி இல்லாமல் வேளாண்மை போன்ற துறைகளைக் கற்றுக்கொள்ள இயலாது.
Must Read:கூந்தல் எண்ணை தயாரிக்கும் மென்பொருள்பொறியாளர்…
களப் பயிற்சி இல்லாமல் வேளாண்மையில் இறங்குவது நீரில் இறங்காமல் நீச்சல் கற்றுக்கொள்வதைப் போன்றது. ஆயினும் பலருக்கு ஆர்வமூட்டவும், அறிமுகம் செய்யவும், அறிவியல் விளக்கங்கள் தரவும் அடிப்படையான உரைக்கோவைகள் (Lecture Series) தேவைப்படுகின்றன. இதன் மூலம் பலருக்கும் இயற்கையின் மீது ஆர்வமும் அக்கறையும் உருவாகும் என்பதில் ஐயமில்லை.
இந்த உரைத்தொடரை காந்திக்கிராமத்தில் அமைந்துள்ள ஊழியரகத்தில் வழங்க சர்வோதயத் தலைவரும், பத்மவிபூசன் விருது பெற்றவருமான அம்மா கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அனுமதியளித்துள்ளார்கள். மருத்துவர். சத்யா, மருத்துவர். பூமிக்குமார் ஆகியோர் இந்த முயற்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகின்றனர்.
இந்தத் தொடருக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய LAFTI - காந்தி அவர்கள் முன்வந்துள்ளனர். இதற்கான நல்லதொரு அரங்கமும், அதைச் சுற்றி உருவாகி வரும் திணையியல் பண்ணை முறையும், பெர்மாகல்சர் வடிவமைப்பும் நமக்கு மிகுந்த பயனைத் தரும்.
Must Read: பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை பசியாறுங்கள்…. திண்டிவனம் இளைஞரின் அறப்பணி
மாபெரும் சர்வோதயத் தலைவர்கள், வினோபாபாவே, ஜெகந்நாதன், க.மு. நடராசன் ஆகியோர்களது ஆசி நமக்கு உறுதுணையாக இருக்கும்.இந்த உரைக்கோவையின் முதல் நிகழ்வு மண்ணில் இருந்து தொடங்குகிறது, இயன்றவரை அனைத்து இயற்கைநேயத் தலைப்புகளையும் நாம் வழங்க முயலுவோம்.
இயற்கையன்னையின் அருளால் அது சாத்தியமாகட்டும். முதல் உரையாக மண்வளமும் மண் நலமும் என்ற தலைப்பில் உரையாட உள்ளோம். மண் வளம் பற்றி இதுவரை பெரும்பாலான பயிற்சிகளில் பேசி வருகின்றனர். ஆனால் மண் நலம் என்றால் என்ன என்பதைப் பற்றி நாம் கட்டாயம் அறிந்தாக வேண்டும். அது மிக அடிப்படையானது.
நாள்: 12.11.2022 சனிக்கிழமை, இடம்: காந்திகிராமம், ஊழியரகம், திண்டுக்கல் மாவட்டம். பங்கேற்பு நன்கொடையாக ரூ. 200, செலுத்த வேண்டும். நண்பகல் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அனைத்துத் தொடர்புகளுக்கும் திரு. காந்தி (செல்பேசி எண்: 96004 60581) அவர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
#OrganicAgriEvent #AgriLecture #AgriEvents
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments