தேன்வில்வம் சாப்பிட்டால் 21 விதமான நன்மைகள்
வில்வம் தரும் அற்புத பலன்கள்
வில்வத்தில் ஏராள சத்துகள்
மன அழுத்தம் குறைய வில்வம்
வில்வம் பழத்திலும் பல நன்மைகள்
ஆன்மீகத்தில் வில்வ இலைக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. வில்வ இலையை மாலையாக கோர்த்து சிவனுக்கு அணிவிப்பார்கள். வில்வத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. வில்வபழம், இலை எல்லாவற்றிலம் சத்துகள் உள்ளன. புரதம், தாதுப்பொருட்கள், மாவுப்பொருட்கள், சுண்ணாம்பு, கொழுப்பு சத்துகள் உள்ளன. வைட்டமின் ஈ, இரும்பு சத்து போன்ற சத்துகளும் உள்ளன.
மன அழுத்தம் குறையும்
வில்வ இலையில் இருந்து கஷாயம் தயாரித்து குடித்தால், இந்த அவசர கால உலகில் நமக்கு ஏற்படும் மன அழுத்தம் குறையும். நாட்டு மருந்துக்கடைகளில் வில்வ இலை சிரப் என்று விற்கின்றனர். அதை வாங்கியும் பருகலாம்.
இதையும் படியுங்கள் : கற்றாழை பாயசம் சாப்பிட்டிருக்கிறீர்களா?
வில்வ இலை மட்டுமல்ல, வில்வ மரத்தில் இருந்து கிடைக்கும் பழத்திலும் நிறைய சத்துகள் உள்ளன. வில்வம் பழம், பேதிக்கு சிறந்த மருந்தாக இருக்கும். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், குழந்தைகளுக்கு குடற்புழுக்கள் பிரச்னை இருக்கும்போது வில்வம் பழத்தை கொடுக்கலாம்.
வயிற்றுப் புண் சரியாகும்
இதனால், பித்தம் காரணமாக வரும் அல்சர் நோய் குணம் ஆகும். வாயுவால் ஏற்படும் அல்சருக்கும் வில்வம் பழம் சிறந்த மருந்து. வில்வம் பழத்தை அப்படியே சாப்பிடுவதும் நல்லதுதான். வயிற்றுப் புண்களை சரி செய்வதுடன், இயற்கையாக உங்களுக்கு பசி எடுக்கும்.
வில்வம் சிரப் தயாரிக்கும் விதம்
வில்வ பழத்தை கொண்டு நாமே சிரப் தயாரிக்கலாம். வில்வம் பழங்களில் இருந்து தோலை உரித்து விட்டு சதையை மட்டும் சேகரிக்க வேண்டும். தோராயமாக சுமார் 100 கிராம் அளவுக்கு பழசதை கிடைத்த உடன், அதனை இருமடங்கு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். பின்னர் அதனை வடிகட்டி, அதில் நாட்டுச்சக்கரை சேர்க்க வேண்டும். சிரப் போன்று தயாரித்து அதில் தேன் கலந்து குடிக்க வேண்டும். இந்த சிரப்பை காலை, மாலை இரண்டு வேளையும் எடுத்துக் கொள்ளலாம்.
தேன்வில்வம் செய்வது எப்படி?
வில்வம் பழத்துடன் தேன் சேர்த்து சாப்பிட வலியுறுத்தப்படுகிறது. நன்கு பழுத்து விழும் வில்வ பழங்களை எடுத்து அதன் ஓடு நீக்கி உள்ளே உள்ள பழ சுளைக்கு இருமடங்களவு தேன் எடுத்து வைத்து கொள்ளவும். முதலில் தேனை நன்றாக காய்ச்சவும்,பிறகு எடுத்து வைத்துள்ள வில்வ பழ சுளைகளை அதனுள் போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும் ,
இதையும் படியுங்கள் : கொத்தவரையை இப்படியும் சாப்பிடலாம்
பின்பு அடுப்பை அனைத்து நன்றாக கிளறவும்,பிறகு சூடு ஆறியதும் ஒரு பெரிய கண்ணாடி பாட்டிலில் போட்டு பாட்டிலின் வாயை வெள்ளை துணி கொண்டு கட்டவும் ,இதனை நீர் சுண்டும் வரை தினமும் சூரிய ஒளியில் வைக்கவும்.பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்,தினமும் காலை, மாலை வெறும் வயிற்றில் இரண்டு ஸ்பூன் எடுத்து சாப்பிடவும்.
21 விதமான நன்மைகள்
1.நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.,
2.நமது உடலில் கால்சியம் அதிகரிக்கும்.,
3.எலும்புகள் உறுதியடையும்.,
4.மூட்டுவலி குணமாகும்.,
5.நாள்பட்ட வியாதிகள் தீரும்.,
6.உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும்.,
7.தேவையற்ற ஊளைச்சதை உடல் எடை குறையும்.,
8.இரத்த சோகை குணமாகும்.,
9.முடி வளர்ச்சி அதிகரிக்கும் முடி கொட்டுதல் குறையும்.,
10.குறைந்த வயதில் வயதுக்கு வருவது நிற்கும்.,
11.மனம் செம்மையடையும்.,
12.அதிக வைட்டமின் நிறைந்தது.,
13.அதிக Fibre நிறைந்தது.,
14.அதிக பொட்டாசியம் சக்தி நிறைந்தது.,
15.அதிக இரும்பு சத்து நிறைந்தது.,
16.இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.,
17.கீல்வாதம் குணமாகும்.,
18.எலும்புபுரை குணமாகும்.,
19.நரம்புகள் வலுப்பெறும்.,
20.பெருங்குடல் அழற்சி நீங்கும்.,
21.மனச்சோர்வை நீக்கும்.
எங்கு கிடைக்கும்
தேன் வில்வம் தேனில் ஊறவைத்த வில்வம் உடலுக்கு நல்லது நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்தது நோய் எதிர்ப்பு சக்தி ( immunity power) அதிகரிக்கும். நரம்புகள் வலுப்பெறும் இதை தினமும் உண்டுவர நாள்பட்ட நோய்கள் அனைத்தும் குணமாகும் என்பது திண்ணம்.தேன் வில்வம் வேண்டுவோர் ஓசூரில் 9790008071 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு வாங்கலாம். சதுரகிரி அழகேசன் என்பவரிடம் 94860 7241 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொண்டும் வாங்கலாம்.
-ஆகேறன்
#Vilvam #VilvamLeaf #BenefitsOfVilvam #VilvamFruit
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Comments