அசிடிட்டி, வாயு தொல்லையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் தெரியுமா?


அசிடிட்டி பிரச்னையால் நமது செரிமானம் பாதிக்கப்படுகிறது. செரிமானம் இல்லாவிட்டால் பல நோய்களுக்கு அது வழிவகுக்கும். அசிடிட்டி பிரச்னையை நம்மிடம் உள்ள இயற்கை பொருட்களை கொண்டே தீர்த்துக் கொள்ளலாம்.

தினமும் நாம் சாப்பிட்ட பின்னர் ஒரு சிறு துண்டு வெல்லத்தை வாயில் போட்டு சாப்பிட வேண்டும். அதே போல ஒரு டீ ஸ்பூன் சோம்பை வெதுவெதுப்பான தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து பின்னர் மறுநாள் காலையில் அதனை வடிக்கட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.

Must Read: பனை விவசாயத்திற்கு நல்ல எதிர்காலமும் அதிகரிக்கும் சந்தை வாய்ப்புகளும்...

தினமும் துளசி இலையை மென்று அப்படியே அதை சாப்பிட வண்டும் அல்லது துளசி இலையில் தேநீர் தயாரித்து அதனை தேன் கலந்து குடிக்கலாம்.  இஞ்சி தேநீர் தயாரித்தும் குடிக்கலாம். இஞ்சியை உப்பில் தொட்டு, வாயில் போட்டு மெல்ல வேண்டும்.

தினமும் 10 முதல் 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். குடிக்கும் தண்ணீர் வெதுவெதுப்பாக இருந்தால் மிகவும் நல்லது. தினமும் மோர் குடிக்க வண்டும். மோருடன் மிளகு, கொத்தமல்லி சேர்த்து சாப்பிடலாம்.

வாயு தொல்லையில் இருந்து விடுபட

ஒருநாள் ராத்திரி முழுக்க தூக்கம் இல்லை, மறுநாள் இரவுப்பணி இதனால் வாயு தொல்லை ஏற்பட்டது.  காலையில முடக்கத்தான் இலையை பறிச்சிட்டு போய் கஷாயம் போட்டு குடிச்சேன். ராத்திரி பிரண்டை துவையல் செஞ்சி சாப்பிட்டேன். பகல்ல கொஞ்சம் தூக்கம் போட்டேன். அவ்வளவுதான். ராத்திரி நல்லா தூக்கம் வந்திச்சி. மறுநாள் காலையில ஓமத்தை இளம் வறுப்பா வறுத்து பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டேன். வாயு ரிலீஸ் ஆகிவிட்டது. 

பொதுவா வாயுத்தொல்லை வந்து குதம் வழி காற்று பிரிதல் நடந்தால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  அது மாரடைப்பு மாதிரியே அறிகுறியை உண்டாக்கும்.  ஆனா அது மாரடைப்பு கிடையாது. நெஞ்சை பிசைஞ்சிட்டு தலையை சுத்திட்டு மயக்கம் மயக்கமா வரும். தூக்கம் வராது, மூச்சு விட கஷ்டமா இருக்கும். இந்த மாதிரியெல்லாம் பிரச்சினை வந்தா வயிறை கிளீன் பண்ணுங்க. எல்லாம் சரியாயிரும். 

-எம்.மரியபெல்சின் 

#Acidity  #GastricProblem #HowToCureGastric 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 
 

Comments


View More

Leave a Comments