ஏழைகளுக்கு ஒரு ரூபாயில் மதிய உணவு...டெல்லி எம்.பி-யின் அதிரடி திட்டம்


கிரிக்கெட் வீர ரும், பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு டெல்லி லோக்சபா தொகுதி எம்.பி-யுமான கவுதம் கம்பீர் இந்த மதிய உணவுத்திட்டத்தை தமது சொந்த செலவில் நாளை தொடங்க உள்ளார். அவர் திறக்க உள்ள கேன்டீனில் ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கப்படும் என்று கூறி உள்ளார். இதற்கு அந்த தொகுதியின் மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஏழை, எளிய மக்கள் இந்த திட்டத்துக்கு பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குடியரசு தினத்தன்று டெல்லி அசோக் நகரிலும் இன்னொரு கேன்டீனையும் அவர்திறக்க உள்ளார். அதிலும் ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கப்பட உளகளது. இதே போல மேலும் பத்து உணவகங்களை திறக்கவும் கவுதம் கம்பீர் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. மக்களவை எம்.பி-யின் மகத்தான செயலை நிச்சயம் வரவேற்போம். கவுதம் கம்பீர் தமது ஜிஜி அறக்கட்டளையின் வாயிலாக இந்த உணவுத்திட்டத்தை செயல்படுத்த உள்ளார் என்று கூறப்படுகிறது.

 

Comments


View More

Leave a Comments