ஜெயின் அறக்கட்டளையின் ஒரு ரூபாய் உணவு


இலவசமாக ஒன்றை கொடுத்தால் அதன் அருமை தெரியாமல்போய்விடும் என்று நம் முன்னோர்கள் சொல்வதுண்டு. எனவே இலவசமாக தருவதை விட ஒரு ரூபாய்க்கு உணவு வழங்குகின்றனர்

சென்னையில் உள்ள ஜி.என்.செட்டி தெருவில் இருக்கும் ஜெயின் கோவிலில், ஜெயின் அன்னபூர்ணா டிரஸ்ட் நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது. இந்த நிறுவனத்தின் சார்பில் தினமும் 250 பேருக்கு ஒரு ரூபாய் விலையில் உணவு வழங்குகின்றனர். ஏழை, எளியவர்கள், தெருவோரம் வசிப்போர் என தினமும் 250 பேருக்கு உணவு வழங்குகின்றனர். தங்களால் முடிந்த அளவுக்கு உணவு வழங்கப்படும் என்று ஜெயின் சமூகத்தினர் கூறுகின்றனர். ஏழை எளியவர்களுக்கு ஒரு ரூபாயில் உணவு வழங்கும் அவர்களின் உன்னத செயல் பாராட்டுக்குரியது.


Comments


View More

Leave a Comments