உணவு டெலிவரி செயலிகளின் அபார வளர்ச்சி


கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் ரெஸ்டாரெண்ட்களுக்கு சென்று உணவு வகைகளை வாங்கி உண்பது என்பது இயலாத காரணமாக இருந்த து. இந்த சமயத்தில்தான் ஜொமோட்டோ, சுவிக்கி போன்ற உணவு டெலிவரி செய்யும் மொபைல் செயலிகள் வாடிக்கையாளர்களுக்கு வரபிரசாதமாக அமைந்தன. இளைஞர்கள் மத்தியில் மட்டுமே பிரபலமாக இருந்த இந்த செயலிகள் பலதரப்பினரையும் சென்று சேர்ந்த து கொரோனா காலத்தில்தான்.

2021ம் ஆண்டு புத்தாண்டு பிறப்புக்கு முன்பு ஜொமோட்டா, சுவிக்கி உணவு டெலிவரி செயலியில் ஒரு நிமிடத்துக்கு 4,000 முதல் 5000 உணவுகள் ஆர்டர் செய்யப்பட்டன.

கொரோனா காலத்தின்போது தலா ஒரு ஆர்டரில் கிடைத்த தொகை என்பது முந்தைய காலத்தை விட அதிகம் இருந்தது. அதிக ஆர்டர்கள் செய்யப்பட்டன. அதே நேரத்தில் டெலிவரி செய்வதற்கான செலவுகள் குறைவாகவே இருந்தன. இதனால், லாபம் அதிகரித்திருக்கிறது.

ஜொமோட்டோ, சுவிக்கி இரண்டு மொபைல் செயலி நிறுவனங்களும் ஏறுமுகத்தில் இருப்பதால், ஜொமோட்டோ நிறுவனத்தில் மட்டும் புதிதாக பத்து முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். சுவிக்கி நிறுவனத்தில் இரண்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.

-பா.கனீஸ்வரி

#FoodDelivery   #FoodDeliveryApps  #Zomato  #Swiggy


Comments


View More

Leave a Comments