
கோடையில் பூக்கும் இந்த பூக்களின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..
வேப்பம்பூ ஊர் முழுக்க பூத்துக்கிடக்குது. ஆனா நாதியத்துக் கிடக்கு. நம்ம மக்கள் (எல்லோரையும் அல்ல) வாய் கிழிய பேசுவாங்க. மரபைத் தேடுறோம், பாரம்பரியத்தை நோக்கி நடைபயணம் போறோம், ஆர்கானிக், இயற்கை வழிக்கு திரும்புறோம்னு சொல்வாங்க. ஆனா, இந்த கசப்பான வேப்பம்பூவை கண்டுக்கிட மாட்டோம்.
வேப்பம்பூவை துவையல், ரசம் செஞ்சு சாப்பிட்டா குமட்டல், வாந்தி, மயக்கம் சரியாகும். வேப்பம்பூவை ஊற வச்சி குடிச்சா பித்தம் விலகும். வேப்பம்பூக்களை மென்று சாப்பிட்டா வாய்வுத்தொல்லை, ஏப்பம், பசியின்மை சரியாகும்.
Must Read: ஆற்காடு மக்கன்பேடாவை சுவைக்க மறக்காதீர்கள்
வேப்பம்பூவை வெயில்ல காய வச்சி பொடியாக்கி பருப்பு பொடிகூட சேர்த்து சாதத்துல கலந்து சாப்பிடலாம். இதனால செரிமானக் கோளாறு சரியாகும். வயித்துல உக்காந்துகிட்டு பாடாப்படுத்துற கிருமிகள் எல்லாம் சாகும்.
வேப்பம்பூவுல குல்கந்து செஞ்சி சாப்பிட்டா ஆண்மை வளருன்னு சொல்றாங்க. பசும்பால், தேங்காய்ப்பால் தலா 200 மில்லி, அரைச்ச வேப்பம்பூ விழுது 50 கிராம், பனைவெல்லம் 100 கிராம் சேர்த்து அடுப்புல வச்சி லேகியமாகக் கிளறி சாப்பிட்டு வந்தாலும் பலன் கிடைக்கும். அளவைக் குறைச்சும் செஞ்சுக்கிடலாம். தண்ணியை கொதிக்க வச்சி அதுல வேப்பம்பூவைப் போட்டு ஆவி பிடிச்சா தலைவலி, காதுவலி சரியாகும்.
கடாயில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் உளுந்து, காய்ஞ்ச மிளகாய் சேர்த்து வறுக்கணும். பிறகு அதே கடாயில வேப்பம்பூ போட்டு வறுத்து ஆற வைக்கணும். எல்லாம் சூடு ஆறுனதும் அதோட உப்பு, புளி சேர்த்து கொரகொரன்னு அரைச்சா வேப்பம்பூ துவையல் ரெடி. சூடான சாப்பாட்டுல சேர்த்துப் பிசைஞ்சு சாப்பிட்டா சுவையா இருக்கும். மேலே சொன்ன பிரச்னைகளும் சரியாகும்.
-எம்.மரியபெல்சின்
(திரு.மரியபெல்சின் அவர்களை 095514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகளுடன், இயற்கை வேளாண் விளை பொருட்களையும் பெறலாம்.)
#neemflower #neemflowerbenefits #neemflowermedicalbenefit
Comments