ஆம்பூரின் உண்மையான சுவையில் பிரியாணி வேண்டுமா?


ஆம்பூரின் உண்மையான சுவையில் பிரியாணி வேண்டுமா?

தமிழகத்தின் உணவு பாரம்பர்யத்தோடு, அந்தந்த ஊரின் பெயரும் ஒட்டிக் கொண்டிருக்கும். ஆம்பூர் என்ற பெயரைக் கேட்டதும் பலருக்கு அந்த ஊருடன் இணைந்த பிரியாணியும் நினைவுக்கு வரும். ஆம்பூர் பிரியாணியின் சுவைக்கு பல தமிழர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர்.

ஆம்பூர் பிரியாணி என்ற பெயரில் தமிழகம் எங்கும் கடைகள் இருந்தாலும், ஆம்பூர் பாரம்பர்யத்துடன் பிரியாணி கிடைப்பது அபூர்வமான ஒன்று. சென்னையை சேர்ந்த இரண்டு பெண்கள் ஆம்பூர் பாரம்பர்ய சுவை மாறாமல் பிரியாணி தயாரித்து விற்கின்றனர். R a b i a. B என்ற பெயரில் இஸ்டாகிராம் வாயிலாகவும், துன்சோ விநியாக செயலியின் வாயிலாகவும்  உணவகம் நடத்தி வருகின்றனர். நசீனா ஹபீப், அம்ரின் ஃபாத்திமா என்ற இரண்டு பெண்கள்தான் இந்த உணவகத்தின் உரிமையாளர்கள். இவர்களின் சொந்த ஊர் ஆம்பூர் என்பதுதான் இவர்கள் நடத்தும் உணவகத்தின் சிறப்புக்கு கூடுதலான வலு சேர்க்கிறது. அம்ரினின் பாட்டி ரபியா பெயரில் உணவகம் நடத்துவது என்று தீர்மானித்தனர்.  சுத்தமான தூய இறைச்சி, வீட்டிலேயே அரைக்கப்பட்ட மசாலா ஆகியவற்றால்தான் உணவின் சுவை அதிகரிக்கிறது என்று இவர்கள் சொல்கின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு உணவு தயாரித்து விற்பது என்று திட்டமிட்ட இவர்கள் முதலில் நொற்றுக்குத் தீனிகள் தயாரிப்பில் ஈடுபட்டனர். அதிலும் குறிப்பாக பதர் சமோசா என்ற நொறுக்குத் தீனியை தயாரித்தனர். இந்த சமோசா ஆம்பூரில் மிகவும் பிரபலம்.  இறைச்சியுடன் மொறுப்பாக சமோசா இருக்கும். இவர்களின் சமோசா விற்பனை நாளுக்கு நாள் பிரபலம் அடைந்தது. சமோசாவை ருசி பார்த்தவர்களின் வாய் வழி விளம்பரத்தில் நாளடைவில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதையடுத்து ஆம்பூர் மட்டன் பிரியாணியை தயாரித்து விற்கத் தொடங்கினர். பிரியாணியுடன் ரைத்தா, கிரேவி ஆகியவற்றையும் விற்கின்றனர்.


Comments


View More

Leave a Comments