#TrendingHealthstory கொரோனா காலத்தில் இந்தியர்கள் எந்த உணவுக்கு அதிகம் செலவிட்டார்கள் தெரியுமா?


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கோவிட் -19 தொற்றுநோய் இந்தியாவைத் தாக்கியது, நமது வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்து, பொருளாதாரத்தை சிதைத்தது, 

2020-21ம் நிதியாண்டில் நுகர்வு தொடர்பாக புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, கொரோனா காலகட்டத்தில் இந்தியர்கள் உணவகங்கள், ஹோட்டல்கள், மதுபானம், புகையிலை மற்றும் ஆடைகளுக்கு குறைவாக செலவழித்துள்ளனர், 

ஆனால் வீட்டில் உணவுக்காக அதிகம் செலவழித்துள்ளனர்.  குறிப்பாக முட்டை, கடல் உணவுகள் மற்றும் இறைச்சி  ஆகியவற்றுக்கு அதிகம் செலவிட்டுள்ளனர்.  குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் குடிக்கும் பழக்கமும் இந்த காலகட்டத்தில் குறைவாக வே இருந்திருக்கிறது.   ஆனால் அதே நேரத்தில் காலை நேரத்தில் ஒரு கப் தேநீர் அல்லது காபி குடிக்கும் பழக்கத்தை மறக்கவில்லை. குறைக்கவும் இல்லை. 

கொரோனா காலத்தில் இறைச்சி உணவுகள் அதிகம் உண்டனர்

கொரோனா தொற்றின் போது உணவகம் மற்றும் ஹோட்டல் செலவினங்கள் பெருமளவு குறைந்துள்ளன. 2020-21ம் ஆண்டில், இந்தியர்கள் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களுக்காக ரூ. 92,671 கோடி செலவிட்டுள்ளனர், அதே சமயம் அதற்கு முந்தைய ஆண்டில் இதைவிட இரண்டு மடங்கு அதிகமாக - ரூ. 2 லட்சம் கோடி செலவிட்டுள்ளனர்.

Must Read: #HealtheventsCalender ஜூன் 12ம் தேதி கோவையில் இயற்கைவழி உழவர்கள் ஒன்றுகூடல் மற்றும் விற்பனை சந்தை

உணவகம் மற்றும் ஹோட்டல் துறை சராசரியாக (2015-2020) இந்தியாவின் உள்நாட்டு நுகர்வு செலவினத்தில் சுமார் 2.4 சதவீதத்தைக் கொண்டிருந்தது, இது தொற்றுநோய்களின் போது பாதியாக குறைந்து வெறும் 1.2 சதவீதமாக இருந்தது.  இந்தியாவின் ஹோட்டல் மற்றும் உணவக சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவர் குர்பக்ஷிஷ் சிங் கோஹ்லியின் கூற்றுப்படி, கொரோனா தொற்றின் முதல் அலையின்போது உணவகத் தொழில்துறை ரூ. 1.4 லட்சம் கோடி இழப்பை சந்தித்தாக கூறுகிறார். 

கொரோனா காலகட்டத்தில் இந்தியர்கள் உணவு பழக்கம்

கொரோனா காலகட்டத்தில் மது குடிக்கும் பழக்கமும் குறைந்து இருந்தது. அந்த காலகட்டத்தில்  மது பானங்கள், புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் (போதை) ஆகியவற்றின் நுகர்வு சுமார் 16 சதவீதம் (ஒட்டுமொத்தம்) குறைந்துள்ளது. 2019-20 ம் ஆண்டில், இந்தியர்கள் இந்தப் பொருட்களுக்காக ரூ.1.60 லட்சம் கோடி செலவிட்டுள்ளனர், இது 2020-21ம் ஆண்டில் ரூ.1.35 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.

இறைச்சி உண்பது அதிகரித்ததால் 2020-21ல் ரூ.22,500 கோடி அளவுக்கு முட்டைகள் விற்பனை ஆகின. மீன் மற்றும் கடல் உணவுகளுக்கான செலவு 4.8 சதவீதம் அதிகரித்து - ரூ.1.34 கோடியாக உயர்ந்தது.  இறைச்சிக்கான செலவு 2020-21ல் 4.4 சதவீதம் அதிகரித்தது. .

-ரமணி

#MoSPIData #IndianFoodHabits  #FoodHabit #NonVEgFood #MeatFoods 


Comments


View More

Leave a Comments