துத்தி கீரை சாப்பிட்டால் அஜீரணக்கோளாறு நீங்கும், உடல் சூடு குறையும்…
படத்தில் உள்ள காய் உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கலாம். பீடிகை போட்டு இது என்ன காய் சொல்லுங்கள் பார்ப்போம் என்று உங்களிடம் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்த நான் விரும்பவில்லை. இது துத்திக்காய். ரவுண்ட் சீப்பு மாதிரி இருப்பதால் சீப்புக்காய் என்றும் சொல்வார்கள்.
துத்தியில் பல்வேறு வகைகள் உள்ளன. காட்டுத்துத்தி, பசும்துத்தி, கொடித்துத்தி, பணியாரத்துத்தி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட துத்தி வகைகள் உள்ளன. எனினும், இதில் பணியாரத்துத்தி என்ற துத்தி வகை அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
Must Read: பசி உணர்வை கட்டுப்படுத்த உலர் பிளம்ஸ் சாப்பிடுவது நல்லது
துத்தி காய் மட்டுமல்ல, இலையை கீரையாக சமைத்து உண்ணலாம். துத்தி இலைக்கு நிறைய மருத்துவக்குணம் இருக்கிறது.. துத்தியின் காய்கள் தோடு போன்று காணப்படும். இது இனிப்புச் சுவை உடையது. உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரக்கூடியது. இது கடற்கரை ஓரங்கள் மற்றும் சாலை ஓரங்களில் வளரக்கூடியது.
துத்திக்காயில் உள்ள விதைகளை இடித்துப் பொடியாக்கி அதனுடன் கற்கண்டும், தேனும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வெண்மேகம், உடல்சூடு, தோல் நோய்கள், வெள்ளைப்படுதல் சரியாகும்.இன்னொரு முக்கியமான விஷயம்... துத்திப்பூவையும் அதன் காம்பு, மொக்கு சேர்த்து கருப்பட்டி சேர்த்து கசாயம் வைத்துக் குடித்தால் ஆண்மை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.துத்திக்கீரையுடன் பசும்பால் சேர்த்து காய்ச்சி, அதில் நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால், உடல் சூடு குறையும், தாது விருத்தி ஏற்படும். ஆண்களின் விந்தணு குறைபாடுக்கு தீர்வு கிடைக்கும்.
துத்தி கீரையை தண்ணீரில் போட்டு அதனை கொதிக்க வைத்து, பிறகு அந்த தண்ணீரை எடுத்து அதில் வாய் கொப்பளித்தால், பல், ஈறு நோய்களுக்கு தீர்வு கிடைக்கும். துத்தி கீரையை ரசமாக வைத்து சூப் போல குடித்தால், சிறுநீர் கழிக்கும் பிரச்னை இருந்தால் தீர்வு கிடைக்கும்.
துத்திக்கீரையை தொடர்ந்து சாப்பிடுவதன் வாயிலாக மூல நோயில் இருந்து விரைவில் தீர்வு கிடைக்கும். துத்திக்கீரையை சாறாக எடுத்து, அத்துடன் சுத்தமான நெய் சேர்த்து சாப்பிடும்போது அஜீரணக் கோளாறுகள் சரியாகும்.
Must Read: கொரோனாவில் இருந்து விடுபட மூலிகை கசாயங்கள்
இப்படியாக மிக சாதாரணமாக கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு சிகிச்சை அளிப்பது பற்றி சொல்லி வருகிறேன். சில மூலிகைகளை நானும் பரிசோதித்து பார்த்து சொல்லி வருகிறேன். இன்னும் சொல்லப்போனால் கொரோனாவிலிருந்து மிக எளிதாக மீண்டுவருவது குறித்து ஆலோசனை வழங்கி வருகிறேன். நான் மட்டுமே நலமாக இருப்பது முக்கியமல்ல; என்னைச் சுற்றியுள்ளவர்களும், என்னிடம் ஆலோசனை கேட்பவர்களும் நலம் பெற வேண்டும்.
-எம்.மரியபெல்சின்(திரு.பெல்சின் அவர்களை 95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம்)
#ThuthiKeerai #ThuthiKai #ThuthiKeeraiBenefits #PattiVaithiyam
Comments