மகிழ்ச்சி ஹார்மோன்கள் அதிகரிக்கும் உணவுகள் என்ன தெரியுமா?


2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவியது முதல் இரண்டு ஆண்டுகள் நீடித்தது. கொரோனா தொற்றில் இருந்து பலர் குணம் அடைந்து விட்டனர். எனினும் கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் பலர் தொடர் பின் விளைவுகளால் பல்வேறு உடல்நலக்கோளாறுகளை சந்தித்துள்ளனர். இதுதவிர பெரும்பாலானோர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர் 

உடல் ஆரோக்கியம் எந்த அளவுக்கு முக்கியமோ, மனநல ஆரோக்கியமும் அந்த அளவுக்கு முக்கியம். மனநிலை நன்றாக இருந்தால்தான் நம்மை சுற்றியிருப்போருடன் இணக்கமான நிலையை கடைபிடிக்க முடியும்.  நம் மனது சந்தோஷமாக இருப்பதற்கு, நம் உடலில் உள்ள சில ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

Must Read:தூங்கும் முன்பு என்ன உணவுகள் சாப்பிட வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும் தெரியுமா?

நமது மனதுக்கு மகிழ்ச்சி தரும் ஹார்மோன்களை சுரக்க செய்வதற்கு சில உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. செரட்டோனின், எண்டோர்பின், டோபமைன், ஆக்சிடோசின் ஆகிய ஹார்மோன்கள் நம் உடலில் சுரக்கின்றன. இந்த ஹார்மோன்கள்  மகிழ்ச்சி ஹார்மோன்கள் என்று அழைக்கப்படுகின்றன. 

மகிழ்ச்சி தரும் ஹார்மோன்கள் அடங்கிய உணவு

எனவே இந்த ஹார்மோன்கள் சமநிலையில் இருக்க வேண்டியது முக்கியம். மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரப்பதற்கு ஏற்ற உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம் மீன், கோழி இறைச்சி, வெண்ணைய், பூசணி விதைகள், வேர்கடலை போன்றவை சாப்பிடுவதன் மூலம் செரட்டோன் ஹார்மோன் அளவு அதிகரிக்கும். மற்ற ஹார்மோன்களை விடவும் செரட்டோனின் நல்ல தூக்கத்துக்கும், கற்றுக்கொள்ளும் திறனுக்கும் உதவுவதாக இருக்கும்.  

சிலகாரமான உணவுகள் மூலம் என்டோர்பின் ஹார்மோன் அளவை அதிகரிக்கலாம். முட்டை, பட்டாணி, பாதாம், பிஸ்தா போன்ற உணவுகள் மூலம் டோபமைன் உற்பத்தியை அதிகரிக்க முடியும். 

-பா.கனீஸ்வரி 

#HappyHormoneFoods, #SerotoninHormoneFoods, #FoodForHappyAndHealthy

 
 

Comments


View More

Leave a Comments