திருப்பத்தூர் சித்த மருத்துவ சிகிச்சை மையம் மீண்டும் தொடங்குகிறது


கொரோனா தொற்றின் முதல் அலை, இரண்டாம் அலை ஆகியவற்றின் தாக்கத்தின் போது தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சித்தமருத்துவ வழியிலும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. எண்ணற்றோர் பக்கவிளைவுகள் ஏதும் இன்றி முற்றிலும் குணம் அடைந்து சித்தமருத்துவத்தின் மகத்துவத்தினை பாராட்டிச் சென்றனர். இப்போது கொரோனா மூன்றாவது அலையின் போதும் கொரோனா தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு தமிழ்நாட்டில் சித்தமருத்துவமனைகள் வாயிலாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 

Must Read: சிறுநீரக கற்களைக் கரைக்கும் குடசப்பாலை

தை பிறந்தால் வழி பிறக்கும்…’ என்பது பழமொழி!... மூன்றாவது அலையில் கொரோனாவிற்கான திருப்பத்தூர் சித்த மருத்துவ சிகிச்சை மையம் தை பிறக்கும் போது மீண்டும் தொடங்குகிறது. முதல் இரண்டு அலைகளில் இருந்த அதே இயற்கை சூழலுடன் அதே அக்ரகாரம் பாலிடெக்னிக் கல்லூரியில் புதுப்பொலிவுடன் வழி பிறக்கிறது!

கொரோனாவிற்கான சித்த மருத்துவம் நோக்கிய பயணம் மீண்டும் தொடங்கவிருப்பதில் மகிழ்ச்சி! வழக்கம் போல குடும்பத்தை பிரிந்திருக்க வேண்டிய சூழல் தான் என்றாலும் கொரோனா மையத்தில் பொங்கல் திருநாளை கொண்டாடி குடும்ப சூழலை உருவாக்கி முதல் நாளை துவக்க வேண்டியது தான்!

Must Read: கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம் இஞ்சி மிட்டாய்…

கொரோனா பயனாளிகள் மன மகிழ்ச்சியுடன் வசிக்கும் சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையம்’ என்ற அதே அடைமொழியுடன், கொரோனா நோயாளர்களின் உள நலம் மற்றும் உடல் நலம் காக்க களமிறங்குவோம்!... சேர்ந்து பயணிக்க இருக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி!...அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் நேர்வழியில் நடப்போம் மையத்தை நோக்கி.

-Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

#Corona3rdWave #CoronaOmicron #SiddhaTreatmentForCorona 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

 

Comments


View More

Leave a Comments