எப்போதும் பசியுடன் இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்


எப்போதும் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று மனநிலையிலேயே சிலர் இருப்பார்கள். இத்தையகவர்கள் எவ்வளவு சாப்பிட்ட பிறகும் பசியுடன் இருப்பார்கள். . நீங்களும் தொடர்ந்து பசியோடு இருப்பது போலவே தோன்றும்.  ஏன் அப்படி தோன்றுகிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதனை தவிர்ப்பது நல்லது. 

எப்போதும் பசித்துக் கொண்டே இருப்பது ஏன்? 

மனித உடல் எப்போதும் ஆற்றலுடன் இருக்க வேண்டியது முக்கியம். மனித உடல் ஆற்றலை இழந்துவிட்டது என்பதற்கு அறிகுறி பசியின் உணர்வுதான். போதுமான கலோரி உணவை நாம் உட்கொள்ளாதபோது நம் உடலுக்கு ஆற்றல் தேவைப்படுகிறது. அப்போதெல்லாம் நமக்கு பசி உணர்வு தூண்டப்படுகிறது. உணவு உட்கொண்ட பிறகு சில மணி நேரம் கழித்து பசியுடன் இருப்பது இயல்பான ஒன்று. ஆனால்  எப்போதுமே பசியுடன் இருப்பது, பசித்துக்கொண்டே இருப்பதற்கு அடிப்படை காரணம் இருக்கலாம்.

ஹார்மோன் மாற்றம் 

பொதுவாக பெண்கள் பீரியட்ஸ் காலங்களில் திடீர் மனநிலை மாற்றங்களுக்கு ஆளாகிறார்கள். அப்போது சிலர் நிறைய சாப்பிடுகிறார்கள் அல்லது சிலர் சாப்பிடாமலேயே இருக்கின்றனர். ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் காரணமாக இது நிகழ்கிறது, பொதுவாக நம் உடல் அதிக கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் சர்க்கரை சத்துக்காக ஏங்குகிறது. இது எல்லோருக்கும் பொதுவானது. உங்கள் உடலுக்கு சில இயற்கை இனிப்புகள் அல்லது ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் பொருட்களை உண்பதன் மூலம் இயல்பாகவே அந்த பசியை கட்டுப்படுத்தலாம்.

இரவில் அதிகமாக உண்பது 

ஒரே நேரத்தில் தேவையான அளவை விட அதிகமாக கார்போஹைட்ரேட் கொண்ட பொருட்களை உட்கொள்ளும்போது, ​​அவை உங்கள் உடலில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும். 

ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு திடீரென அதிகரிப்பது இன்சுலின் வெளியீட்டைத் தூண்டுகிறது. இதன் விளைவாக, சர்க்கரை அனைத்தும் உடலில் வேகமாக ஈர்க்கப்படும். அப்போது அதிக கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை உட்கொள்வதற்கான கட்டுப்பாடற்ற வகையில் நீங்கள் தூண்டப்படுகின்றீர்கள்.  அதிகப்படியான இன்சுலின்  உற்பத்தி காரணமாக திடீரென ரத்தத்தில்  சர்க்கரை அளவு குறையும். அப்போது இரவில் நீங்கள் மிகவும் பசியோடு இருப்பதை உணரலாம்.

மன அழுத்தம் மற்றும் பதட்டம் 

மன அழுத்தம் என்பது அதீத பசிக்கு மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும். அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் பதட்டம் கார்டிசோலின் என்ற ஹார்மோன் அதிகரிப்புக்கு வழிவகுக்கும், இது பசி மற்றும் பசியை ஊக்குவிக்கும் ஹார்மோன் ஆகும். மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட உங்கள் உடலுக்குத் தேவையில்லாத கூடுதல் கலோரிகளை நீங்கள் உட்கொள்ள முனைகிறீர்கள்.

இதையும் படியுங்கள்;இந்த 5 அறிகுறிகள் உங்கள் உடலில் நீர் சத்து இல்லை என்பதற்கான எச்சரிக்கைகளாகும்

போதுமான தண்ணீர் குடிக்காதபோது பசிக்கும் 

உடலில் நீர் இழப்பு என்பது பசியை தூண்டும்.  உணவை சரியான முறையில் சாப்பிடுவதற்கு தண்ணீரும் அவசியம். போதுமான தண்ணீரைக் குடிப்பது உணவை முறையாக செரிக்க உதவும், இது உங்களை நீண்ட காலமாக பசியில்லாமல் வைத்திருக்கும். ஆனால் சிலர் தவறாகப் புரிந்துகொண்டு, அதிகமாகச் சாப்பிடுவதற்காக, குறைந்த தண்ணீரைக் குடிக்கின்றனர். இது ஒரு தவறான நடைமுறையாகும். சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து போதுமான தண்ணீர் குடிப்பது நல்லது. 

தூக்கமின்மை 

நள்ளிரவு திடீரென சாப்பிடுவது இப்போதைய மில்லினியல்களில் பழக்கமாக இருக்கிறது. நீங்கள் இரவில் விழித்திருந்தால் அல்லது சரியான தூக்க முறையைப் பின்பற்றாவிட்டால் திடீரென பசி எடுக்கும்.  தூக்கமின்மை உங்கள் பசியைத் தூண்டும். கிரெலின் என்ற ஹார்மோனைத் தூண்டுகிறது. ஆனால் உங்கள் உடல் தூக்கத்தை இழந்தால், கிரெலின் ஹார்மோனின் அதிகரிப்பு பசியையும் அதிகரிக்கும். எனவே, உங்கள் உடலின் சரியான செயல்பாட்டிற்கு, சரியான தூக்கம் மிகவும் முக்கியம்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை அவசியம் 

நம் பசியானது தூக்கமின்மை, நீர் மற்றும் ஊட்டச்சத்து போன்ற வெளிப்புற காரணிகளுடன் தொடர்புடையது என்பதை நிரூபிக்கும் வகையில் நிறைய ஆய்வுகள் வெளி வந்துள்ளன. எனவே, நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள்.

-பா.கனீஸ்வரி 


#WhyAlwaysFeelingHungry   #FeelingHungry  #FeelingHungry #FoodNewsTamil

 

Comments


View More

Leave a Comments