
கோவையில் 25 ஆம் தேதி முதல் இயற்கை விளைபொருள் வார சந்தை
கோவை, கணபதியில் செஞ்சோலை நடத்தும் இயற்கை விளைபொருட்களின் வார சந்தை வரும் 25ஆம் தேதி முதல் சூலூர்.செஞ்சோலை-யை மையமாகக் கொண்டு தொடங்குகிறது.
செஞ்சோலை சார்பில் இயற்கைவழி வேளாண்மை & வாழ்வியல் சார்ந்த பயிற்சி/நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்திவருகிறோம்.நமது இயற்கைவழி உழவர்களின் விற்பனை வாய்ப்பிற்காக கடந்த ஓராண்டுக்கு மேலாக மாத-சந்தையினை நடத்திவருகிறோம்.
Must Read: ஒரே சிக்கன் 65 விதம், விதமான உணவாக மாறும் அதிசயம்…
பல இயற்கைவழி உழவர்கள் தொடர்ச்சியாக நம்முடன் இணைந்து வருவதால்,கோவையின் நகர்ப்பகுதிக்குள் நமது சந்தையினை விரிவுபடுத்த வேண்டியுள்ளது. மாத சந்தையைக் கடந்து, நிலையான சந்தை வாய்ப்பினை வடிவமைக்க வேண்டியுள்ளது.
இச்சூழலின் காரணமாக, செஞ்சோலை சமூக அங்காடியை துவங்க இருக்கிறோம். துவக்கத்தில், எல்லா ஞாயிறும் வார சந்தையாக நடத்தப்படும்.பின்னர் மக்களின் வரவேற்பைப் பொறுத்து விரிவு படுத்தப்படும்.
இயற்கை விளைபொருட்களின் வார சந்தை எல்லா ஞாயிறும் காலை 09.30 மணி முதல் மாலை- 04.00 வரை செஞ்சோலை சமூக அங்காடி,இளங்கோநகர், ஆவாரம்பாளையம், (அத்திப்பாளையம் பிரிவு - பீளமேடு சாலை) என்ற முகவரியில் நடைபெறும்.
காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ., கணபதி பேருந்து நிறுத்தத்திலிருந்து 2 கி.மீ. பீளமேடு பேருந்து நிறுத்தத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலும் செஞ்சோலை சமூக அங்காடி அமைந்துள்ளது. மேலும் விவரங்களுக்கு 9566665654 அல்லது 7904440266 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
–செந்தில் குமரன், செஞ்சோலை
#senjolaiweeklymarket #senjolai #organicmarket #organicproducts
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments