சித்தமருத்துவத்தில் சாத்தியமான கருப்பை மென்கழலை கட்டிகள் அகற்றல்..


நோயாளி சித்த மருத்துவரின் பரிந்துரையின் படி நம்மிடம் அனுப்பி வைக்கப்பட்டவர். நோயாளி நம்மிடம் வரும்போது கடுமையான உதிரப்போக்கு இருந்துள்ளது.உடனடியாக அறுவை மருத்துவம் செய்ய வேண்டும் என்றும் உதிரப்போக்கை நிறுத்துவது கடினம் என்றும் கூறி அறுவை மருத்துவத்தை மகளிர் மருத்துவர் பரிந்துரைத்ததால் நோயாளி சித்த மருத்துவத்தை அணுகியுள்ளார்.

நாம் நோயாளியிடம் முதலில் கூறியது. நான் உதிரப்போக்கை நிறுத்தி நோயாளியின் குருதி சிவப்பணுக்களை அதிகப்படுத்த முயற்சிக்கிறேன் பின் கட்டியை கரைக்க முயற்சிக்கலாம் என கூறினேன். அதன்படி முதலில் உதிரப்போக்கை நிறுத்த மருந்துகள் தரப்பட்டது.

சித்தமருத்துவத்தில் சாத்தியமான கருப்பை மென்கழலை கட்டி அகற்றம்

பின் இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகளும் பரிந்துரைக்கப்பட்டது. முதல் ஆறுமாதம் மாத உதிரப்போக்கு நிகழும் சமயங்களில் அதிகமாவதும் பின்பு அதற்கான மருந்தும் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டது. 

மருத்துவ சோதிடம் 

நோயாளி பரணி நட்சத்திரம் என்பதால் இவர்களுக்கு இயல்பாகவே உடல் சூடு அதிகமாகும். எனவே எடுத்தவுடன் இவர்களுக்கு பெருமருந்து பரிந்துரைத்தோமேயானால் இவர்களுக்கு அதீத பித்தமாகி பின் வயிற்றெரிச்சல் வாய்ப்புண் அல்லது மீண்டும் அதிக உதிரப்போக்கு வந்துவிடும் என்ற காரணத்தால் பித்தத்தை தன்னிலைப்படுத்தும் மருந்துகள் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டு பின் வாரம் இருமுறை குளிர்தாமரை தைலம்  எண்ணெய் குளியல் மேலும் நசியம் வமனம் பேதி போன்றவைகளை முறையாக கடைபிடிக்கப்பட்டது.

Must Read: இது தெரிந்தால் நீங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோலை வீணாக்க மாட்டீர்கள்…

மீண்டும் இயல்பான நீர்க்கட்டிகளை குறைக்கும் மருந்தோடு முறையான ஆசனப்பயிற்சியையும் சொல்லியிருக்கிறோம் இனி வரும் காலங்களில் அதுவும் இல்லாமல் போகும். உடல் உறுப்புகளுக்கு ஆபத்து மிகுந்த வன்கழலைகட்டிகள் அதாவது புற்று நோய் போன்ற கட்டிகள் இருந்து அது பரவி ஆபத்தை தரும் என்று கருதினால் உறுப்புகளை எடுப்பது நன்று தான் மறுக்கவில்லை. கட்டிகள் சாதரணமான கட்டியாக இருக்கும்பட்சத்தில் அதை கரைக்க முயன்று பார்க்கலாம் என்பது எனது எண்ணம் 
இந்த நோயாளியின் வயது 34 இந்த வயதில் குழந்தைகள் இருக்கிறது தானே கருப்பையை எடுத்துவிடலாம் என்று அறிவுறுத்துவது எனக்கு சரியானதாகப் படவில்லை.  இனி வாழும் வாழ்நாள் முழுவதும் இந்த  பெண்கருப்பை இல்லாமல் அதனால் வரும் பக்க விளைவுகளை எதிர்கொண்டு மருந்துடனே வாழ்க்கையை வாழவேண்டியிருக்கும்.

ஐம்பது வயதிற்கு மேல் உண்ணும் மருந்துகளை 35 வயதிலே உண்ணும் கட்டாயம் ஏற்பட்டுவிடும். சமீபத்தில்  முகநூலில் கருப்பை அறுவை சிகிச்சை செய்து அதை குறுக்கு வாட்டில் வெட்டி கற்பு என்று ஒன்று இங்கு இல்லை என்ற வாசகத்தை படித்தேன். உண்மை தான் கற்பு என்பது கருப்பையில் இருக்கும் சமாச்சாரமில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.

Must Read: பப்ஸ் பர்கர் பிஸ்கட் பரோட்டா ஆகியவற்றை காட்டிலும் முட்டை நல்லது…

கருப்பை மென்கழலை கட்டிகள் அகற்றம்
கருப்பையை இயல்பாக அதன் பணிகளை செய்ய விட்டாலே இது போன்ற கட்டிகள் வராது தான் ஆனால் நடைமுறையில் ஒத்து வருவதில்லை என்பதால் குறிப்பிட்ட வயதிற்கு பின் சில ஆசனங்களை முறையாக செய்து வந்தாலே வருமுன் தடுக்கலாம்.

தேவையற்ற மருந்துகள் ஹார்மோன் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையில்லாமல் எடுக்காமல் இருக்கலாம். அவரவர் நட்சத்திர லக்ன ராசிக்கு ஏற்ப பிணியணுகா விதி என்ன என்பதை அறிந்து அதை கடைபிடிக்கலாம். இவை எல்லாம் எங்களிடம் இல்லை என்றால் நல்ல சித்த மருத்துவரை அணுகி அவர்களின் நாடியை பரிசோதித்து பின் அதற்கு தக்க பிணியணுகா விதியை கடைபிடிக்கலாம். மீண்டும் ஒரு முறை கூறிக்கொள்கிறேன் உறுப்புகளின் அழுகையே நோய். அதற்காக நோய் முதல் நாடாமல் உறுப்பை வெட்டிவிடுவது மீண்டும் இன்னொரு நோய்க்கே வழிவகுக்கும்.

நன்றி; என்றும் மருத்துவ பணியில் மரு.கீதாமோகன்.

#SuccessStoryOfSiddha  #SiddhaMedicine  #AltenateMedicine

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 


Comments


View More

Leave a Comments