உ்ங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்
ஆரோக்கியமான சமசீரான உணவு உண்பதன் மூலம் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக செயல்படுவது உறுதி செய்யப்படும். ஆரோகியமான சமச்சீரான உணவு உண்பதன் வாயிலாக நாள்பட்ட சீறுநீரகப் பிரச்னையில் இருந்து கூட விடுபடலாம். அனைத்து வகையான கழிவுகள், அசுத்தமின்மையையும் அகற்றி ஜீரண சக்தியை மேம்படுத்துவதற்கு சிறுநீரகம் சீராக செயல்படுவது முக்கியமாகும்.
சிறுநீரக கோளாறு பாதிப்புகள் கொண்டவர்கள், எளிதாக இதயநோய், நரம்பு கோளாறுகள் போன்றவற்றுக்கு உள்ளாக வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தினந்தோறும் சம சீரான உணவுகளை உட்கொள்ளும் போது சிறுநீரக நோய்களில் இருந்து குணம் அடைய வாய்ப்புகள் உள்ளன. ஆரோக்கியமான சிறுசீரகத்துக்கு உட்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகளைத் தவிருங்கள்
துரித உணவுகள் உண்பது ஒட்டுமொத்த சீறுநீரக இயக்கத்துக்கும் ஆபத்தை விளைவிக்கும். பேக்கரி உணவுகள், மைதாவால் தயாரிக்கப்பட்ட உணவுகள், வெள்ளை பிரட், பீட்சா, பர்கர் உள்ளிட்ட துரித உணவுகள் சிறுநீரகத்தை பாதிக்கும் உணவுகளாகும். எனவே இந்த உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகளை தவிருங்கள் என்று சொல்வதன் வாயிலாக நீங்கள் நொற்றுக்குத் தீனிகள் உண்பதை முற்றிலும் தவிருங்கள் என்று சொல்லவில்லை. உங்களுக்கு உள்ள சிறுநீரக கோளாறுக்கு ஏற்ற உணவு பழக்கம் எது என மருத்துவரிடம் ஆலோசனை செய்து அதற்கு ஏற்றார்போல செயல்படுங்கள்.
நாம் எதை மாற்றிக் கொள்ள வேண்டும்?
ஆரோக்கியமான உடல் எடையை நிர்வகிக்க வேண்டும். சமசீரான உணவு முறையை உட்கொள்ள வேண்டும். உப்பு, சர்க்கரை ஆகியவை குறைவாக இருக்கும்படியான உணவை எடுத்துக் கொள்ளும்போது உங்கள் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். சர்க்கரையின் அளவும் சீராக இருக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு கட்டுப்பாடுடன் இருக்கும்போது சிறுநீரகம் மோசமடையாமல் பாதுகாக்கப்படும்.
கீழ் குறிப்பிட்டவற்றை மனதில் கொள்ளுங்கள்
புரோட்டின் என்பது உங்கள் உடலின் சதையின் கட்டமைப்புக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் முக்கியமானதாகும். உங்கள் சிறுநீரகம் பலவீனம் அடையும்போது சரியான அளவு புரோட்டின் எடுத்துக் கொள்வது முக்கியமாகும். சிறுநீரகத்தின் நிலை, சிறுநீரகத்துக்கு எடுத்துக்கொள்ளும் சிகிச்சை, நுண்ணூட்டசத்தின் நிலை ஆகியவற்றைப் பொருத்ததாகும். கோழி இறைச்சி, முட்டையின் வெள்ளைப் பகுதி, மீன், பால் மற்றும் பால் பொருட்கள் ஆகிய அதிக புரோட்டின் கொண்ட உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உங்களுக்கு ஏற்ற புரோட்டின் உணவுகள் எவை என உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள்.
சோடியம் அனைத்து வகையான உணவுப் பொருட்களிலும் இருக்கிறது. பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, துரித உணவுகளில் சோடியம் இருக்கிறது. சோடியம் தாகத்தை அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும், இதயத்துக்கும் பளுவாக இருக்கும்.
சமைக்கும்போது சோடியம் சேர்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்
சமைக்கும்போது உப்புக்குப் பதிலாக எலுமிச்சை, எலுமிச்சை பழரசம், வினிகர், பிரஷ்ஷான மூலிகைகள், முழுமையான வாசனைப் பொருட்களை சமைப்பதற்கு உபயோகிக்கலாம். பதப்படுத்தும் பொருட்களை வாங்கும்போது அதன் பாக்கெட்களில் அச்சிடப்பட்டுள்ள சோடியத்தின் அளவைப் பார்த்து வாங்கவும். சோடியம் குறைவாக சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை வாங்கவும். வெளியில் சாப்பிடும் உணவுப் பொருட்களைக் குறைத்துக் கொண்டு, வீட்டில் சமைத்து சாப்பிடவும். இதன்மூலம் சோடியம் அளவுக்கு கட்டுக்குள் இருக்கும்.
சிறுநீரகத்தின் செயல்பாடு மோசமாக இருக்கும்போது அதிகப்படியான பொட்டாசியத்தை அதனால் வெளியேற்ற முடியாது. இதன் மூலம் சீரற்ற இதயத்துடிப்பு ஏற்படும். சுவாசிப்பதில் கோளாறு ஏற்படும். மூச்சிரைக்கும். பொட்டாசியம் அதிகம் இருக்கும்போது அதனை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொட்டாசியத்தின் அளவை கட்டுக்குள் வைக்க, இளநீர் பருக கூடாது. பழரசங்கள், அதிக பொட்டாசியம் கொண்ட பொருட்களை தவிர்க்க வேண்டும். குறைந்த பொட்டாசியம் கொண்டதாக இருக்கும் வகையில் தினமும் ஒரே ஒரு பழம் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். தினமும் ஒரே ஒரு கப் தேநீர் அல்லது ஒரு கப் காஃபி மட்டும் அருந்துங்கள்.
சிறுநீரக கோளாறு இருக்கும்போது பாஸ்பரஸ் இரத்தத்தில் சேர்ந்து எலும்பை பலவீனமடையச் செய்யும். அதிக அளவு பால் மற்றும் பால் பொருட்கள் எடுத்துக் கொள்வதையும் தவிருங்கள். அதிக அளவு பீன்ஸ் , கொட்டைகள், பதப்படுத்தப்பட்ட, புட்டிகளில் அடைக்கப்பட்ட உணவுகளைத் தவிருங்கள். சிறுநீரக கோளாறு இருப்பவர்கள் தண்ணீர் அதிகம் குடிப்பதை தவிர்க்க வேண்டும். சிறுநீரக கோளாறின் போது அதிகதண்ணீர் குடிப்பது இதய நோய்களை ஏற்படுத்தும், ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும். சிறிய கப்களில் தண்ணீர் குடிக்கவும்.
-பா.கனீஸ்வரி
#FoodsForKidney #KidneysHealthy #HealthyFoodForHealthyLife #FoodNewsTamil
Comments