சத்துணவு மையத்தில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு


சத்துணவு மையங்களில் திடீர் ஆய்வு 

தலைமை செயலாளர் இறையன்பு திடீர் விசிட் 

வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு 

குழந்தைகளுடன் இறையன்பு உரையாடினார்

ஒருங்கிணைந்த குழந்தைவளர்ச்சித் திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சி, மைலாப்பூரில்   திட்டம் 3 மற்றும் திட்டம் 11ல்செயல்படும் துவாரகாநகர், மெக்காபுரம், மற்றும் மைலாப்பூர் பஜார்சாலை ஆகிய இடங்களில் உள்ள மூன்று குழந்தைகள் மையங்களில் தலைமைச்செயலாளர் முனைவர்வெ.இறையன்பு 29.09.2021 அன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

ஆய்வின்போது தலைமைச்செயலாளர், குழந்தைகள் மையங்களில்    வழங்கப்படும் முட்டையுடன் கூடிய சூடான மதிய உணவு  குழந்தைகளுக்கு வழங்கப்படுவதை பார்வையிட்டார். மேலும், குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட காய்கறி புலாவ்சாதத்தினை உண்டு தரத்தினை சரி பார்த்தார். 

தலைமைச்செயலாளர் முனைவர் வெ.இறையன்பு

குழந்தைகளுடன்உரையாடி, மையத்தில்  வழங்கப்படும் முன்பருவக்கல்வி குறித்தும் கேட்டறிந்தார். குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை,  தன்சுத்தம் ஆகியவற்றுடன் குழந்தைகள் மையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளையும் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். குழந்தைகள் மையத்தின் உணவுப்பொருள் இருப்பு அறை, சமையலறை மற்றும் பொருட்களின் பராமரிப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

Also Read: புத்துணர்ச்சியுடன் ஆற்றல் தரும் இந்த உணவுகள் மிகவும் முக்கியம்….

கடந்த ஒன்றாம் தேதி முதல் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் பணி நடைபெற்றுவருகிறது. இம்மையங்களில், கொரோனா பெருந்தொற்றினை தவிர்த்திடும் வகையில் நிலையான வழிகாட்டுநெறிமுறைகளை கடைபிடிக்கவும், குழந்தைகளின் பெற்றோருக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தினார். குழந்தைகளைஅன்புடனும், பாதுகாப்பாகவும் பராமரிக்கவேண்டும் என குழந்தைகள் மையப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

-நன்றி; தமிழக அரசின் செய்திப்பிரிவு 

#TNChiefChiefSecretary  #Viraianbu  #IraianbuIAS #NoonMealScheme

 ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை அளிக்கவும். நிதி உதவி செய்ய; https://www.instamojo.com/@Arokyasuvai

 


Comments


View More

Leave a Comments