தமிழ்நாட்டில் நடைபெற்ற வேளாண் மற்றும் மரபு கலை நிகழ்வுகள்


இயற்கை வேளாண்மை, மரபுகலை பயிற்சிகள் 

நடந்து முடிந்த நிகழ்வுகளின் தொகுப்பு 

நடக்க உள்ள நிகழ்வுகளின் தகவல்கள் 

வாழ்வியல்பயிற்சிகள் குறித்த செய்திகள் 

மிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை arokyasuvainews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை. 

வானகத்தில் ஆகஸ்ட் 27, 28 நடைபெற்ற  மரபு கலை பயிற்சி 

வானகத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் மரபு சார்ந்த பயிற்சிகளில் இக் கலை பயிற்சியை சிரட்டை சிற்பி ஆனந்த பெருமாள் மற்றும் குழந்தைகளின் பொம்மை கலைஞர் திலகராஜன் ஐயா ஆகியோர் கொண்டாட்டமாக நிகழ்த்தி சென்றனர் .

Also Read: ஆகஸ்ட் 31: இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தை

பயிற்சியில் பங்கேற்ற ஐயா  திலகராஜன் அவர்களிடமிருந்து அனைவரும் தங்களின் குழந்தை பருவத்தை மீட்டெடுக்கும் வகையில் தென்னை ஓலையில் கை கடிகாரம் ,  பேசும் பொம்மை ,  ரீங்காரமிடும் வண்டு ,  காந்தி கண்ணாடி , தென்னையோலை காத்தாடி எனும் சிறாராய் மகிந்த கலையை எல்லோருள்ளும் மீட்டளித்து கற்றளித்தார் .

வானகத்தில் ஆகஸ்ட் 27, 28 நடைபெற்ற  மரபு கலை பயிற்சி

கவின் கலைக் கூடம் ஆனந்த பெருமாள் மற்றும் அவரது‌ குழுவினர் இணைந்து தேங்காய் சிரட்டையில் இருந்து விதவிதமான வீட்டு பயன்பாடு மற்றும் கலை நுட்பம் சார்ந்த கைவினை பொருட்களை வடிவமைக்க கற்றளித்தார்கள் முக்கியமாக புட்டு அவிக்கும் சிரட்டைக் கூடு , அஞ்சறைப் பெட்டி , கரண்டி , குவளைகள், டாலர்கள் , விலங்கு பொம்மைகள் , மற்றும் வீட்டு பயன்பாட்டு பொருட்கள் ஆக கற்றளித்தனர் .

Also Read: ஆரோக்கிய சுவை வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்

இவ்வாறாக நாம் பயனற்றது என்று எதையும் தூக்கி எறிய தேவையில்லை அவற்றை எவ்வாறு பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று யோசிக்கும் தருணத்தில் அப்பொருள் கலைவடிவம் மூலம் பயனுள்ள மதிப்பு மிக்க பயன்பாட்டு பொருளாக மாறுகிறது எனும் அடிப்படை தற்சார்பு கல்வியை குழந்தைகளிடமும் பொதுமக்களிடையே விதைத்துக் கொண்டே இருக்கும் இப்பணியை நம் வானகம் தொடர்ந்து கொண்டே இருக்கும் நம் மக்களின் ஒத்துழைப்புடன் .

நன்றி.

- வெற்றிமாறன்.இரா  ( 8610457700 ) -வானகம்  அறங்காவலர் , பயிற்சி ஒருங்கிணைப்பாளர்  

#AgriEvents #OrganicTraining #NaturalLife 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை

எங்களைப் பின்தொடர: முகநூல்  , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

 


Comments


View More

Leave a Comments