விவசாயி பிச்சாண்டியின் நேரடி கீரை விற்பனை


வல்லாரை, எலும்பு ஒட்டி கீரை, மஞ்சள் கரிசாலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி. இரண்டு சக்கர வாகனத்தில் - கீரை வியாபாரம் செய்கிறார் பிச்சாண்டி. மருத்துவக் குணம் நிறைந்த கீரை வகைகள் பற்றி பெண் குரலில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்ட அறிவிப்பு ஒலிக்கிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மெல்ல ஓட்டிச் செல்கிறார். நிறுத்தி வாங்குகிறார்கள்.

கீரையை வாங்கி விற்கும் நடமாடும் வியாபாரி அல்ல, பிச்சாண்டி. கீரை விவசாயி. வல்லாரை 2 ஏக்கர், மருதாணி 4 ஏக்கர், சிவப்பு, பச்சை மற்றும் நாட்டு பொன்னாங்கண்ணி தலா ஒரு ஏக்கர், மஞ்சள் கரிசாலாங்கண்ணி கால் காணி – எனப் பட்டியலிடுகிறார். 

Must Read: உணவு எண்ணெயில் வைட்டமின் இருக்கு என்பதெல்லாம் உடான்ஸ்…

சொந்தமாக மூணரை ஏக்கர். மற்றவை குத்தகைக்கு. திண்டிவனம் அருகேயுள்ள ஏதாநெமிலி சொந்த ஊர். அங்கே பயிரிட்டு கோயம்பேடு சந்தைக்கு கொண்டு வருகிறார். கடையும் வைத்திருக்கிறார். அங்கு விற்றது போக, சென்னை முழுவதும் இப்படியான வாகன விற்பனையும் அன்றாடம் நடக்கிறது. வல்லாரை கீரை நாற்றும் இவரிடம் கிடைக்கும்.

கீரை விவசாயியின் விற்பனை அனுபவம்

பிச்சாண்டியின் மூத்த மகன் என்ஜீனியர். இரண்டாவது மகன் பி.ஏ. பட்டதாரி. இருவரும் கீரை விவசாயம்தான் செய்கிறார்கள். “படிப்புங்கறது கவர்ன்மென்ட் வேலைக்காக இல்ல… அறிவுக்குத்தான்” என்கிறார்.

புல்லு கட்டு கிடைக்காமல் பசுமாடுகள் வளர்ப்பதை பலரும் விட்டுவிட்டார்கள் என்பதை தனது அனுபவத்தில் அறிந்ததாகச் சொல்லும் இவர், “கோமாதா உணவகம்” என்ற பெயரில், விரைவில் புல்லு கட்டு விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறார். 

Must Read: தினமும் மாதுளை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

அடுத்த மாதம் 4 ஏக்கர் புல் விதைக்கப் போகிறோம் என்கிறார். இதற்காக ஒரு சங்கமும் பதிவு செய்து, தன்னைப் போல மற்ற விவசாயிகளையும் புல் விளைச்சலுக்கு தயார் செய்கிறார். அவர்களிடமிருந்து இவர் வாங்கி, விற்பனை செய்யத் திட்டம்.

கீரை விவசாயம் எப்படி ஆரம்பித்தது என்று கேட்டால், “ஒரு சித்த வைத்தியரின் நண்பரா இருந்தேன். டவுண்ல, வல்லாரை கீரை விற்றுப் பார்த்தேன். பிடிச்சுக்கிச்சு…” என்கிறார்.

“ஆர்கானிக்கா பண்ணிப் பார்த்தேன்…. கீரை கொஞ்சம் மஞ்சளா இருந்துச்சு. வாங்க யோசிச்சாங்க. பூச்சி மருந்து அடிச்சு… வளர்த்து கொண்டு வந்து வச்சா… கீரைன்னா இப்படித்தான் இருக்கணும்னு வாங்கிட்டு போறாங்க… என்ன பண்றது…” என்று கேட்கிறார் பிச்சாண்டி.

நன்றி திரு-இளையபெருமாள் சுகதேவ் முகநூல் பதிவு 

#greens #keerai #healthykeerai #keeraisalechennai

TRENDING;  மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்குஜொமாட்டோ அடாவடி,  தேன்சாப்பிடும் முறை


Comments


View More

Leave a Comments