தமிழ்நாட்டில் நடைபெற உள்ள வேளாண் நிகழ்வுகள், பயிற்சிகள், கண்காட்சிகள் குறித்த தகவல்கள்


வேளாண் பயிற்சி முகாம்கள் 

வேளாண் மதிப்புக்கூட்டல் பயிற்சிகள் 

மரபுவழி பயிற்சிகள் 

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். 

Also Read: அன்னம் மறுக்கப்பட்ட விவகாரம் நரிக்குறவப்பெண்ணுடன் உணவு உண்ட அமைச்சர்

இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை arokyasuvainews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை. 

ஒருநாள் வாழ்வியல் சித்த மருத்துவப் பயிற்சி

கோவையில் நவம்பர்-14 ஆம் தேதி ஞாயிறு அன்று செஞ்சோலை நடத்தும்  ஒரு நாள் வாழ்வியல் சித்த மருத்துவப் பயிற்சி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9:30 மணி முதல் மாலை  04:00 மணி வரை பயிற்சி நடைபெறும். சித்தவைத்தியர் அன்புச் செழியன் பயிற்சி அளிக்க உள்ளார். 

இந்த பயிற்சியில் நோயின்றி வாழ எளிய வழிகள், உடலுக்கு ஏற்ற உணவுகள், கை-வைத்தியம் & ஐந்தறை பெட்டி வைத்தியம், குழந்தை நலன், வாழ்வியல் முறை மூலம் உடல் & மன நலம் பேணுதல் ஆகியவை அளிக்கப்பட உள்ளன. 

Also Read: சர்க்கரை நோயாளிகள் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிக்கலாமா?

உணவு & ஏற்பாடு செலவுகளைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதற்காக மட்டும் பயிற்சி நன்கொடையாக ரூ.300/- வசூலிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்ளக விருப்பம் உள்ளோர் அவசியம் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்வதற்கு செந்தில் குமரன்  84897 50624, ஆவூர்.முத்து 96008 73444 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும். 30 நபர்களுக்கு மட்டுமே பயிற்சியில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். மேலும் தொடர்புக்கு; செஞ்சோலை இயற்கைவழி வேளாண் பண்ணை, சூலூர்,கோவை. இணைய வழி தொடர்பு; https://maps.app.goo.gl/9GeKqoa8iviNCCai8

#AgriEvents #OrganicTraining #NaturalLife 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Comments


View More

Leave a Comments