மிளகு, ஏலக்காய்… காய்ச்சல், இருமல்,சளியை குணப்படுத்தும் மாமருந்துகள்…
மிளகு... காய்ச்சலை மிக எளிதாகக் குணப்படுத்துகிறது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.. பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டில்கூட உணவு உண்ணலாம் என்பார்கள். உணவில் நச்சுத்தன்மை இருந்தால் அதைப் போக்கக்கூடியது மிளகு.
அத்தகைய சக்திவாய்ந்த மிளகு காய்ச்சலைக் குணப்படுத்துகிறது என்றால், அது உங்களுக்குக் கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருக்கும். அண்மையில் என`மகளுக்கு ஒடம்பு சுட்டது.என் மனைவி மிளகை வறுத்து இரண்டு முறை மகளுக்கு கசாயம் போட்டுக் கொடுத்தார்.. நான் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்போது என் மகள் காய்ச்சலில் இருந்து நிவாரணம் பெற்றிருந்தாள். சூடா இருந்த உடம்பு வியர்த்துக் கொட்டி குளிர்ந்திருந்தது. இரவில் வழக்கமான உணவைச் சாப்பிட்டாள்.
Must Read: பிஷ் அண்ட் சிப்ஸ் : மீன் பஜ்ஜி தேசிய உணவான கதை
மறுநாள் காலையில் முன்னெச்சரிக்கையாக கறிவேப்பிலை வடிசாறு தயாரித்துக் கொடுத்தேன். (கைப்பிடி கறிவேப்பிலை, 6 மிளகு, அதைவிட இரண்டு மடங்கு சீரகம், இஞ்சி சிறு துண்டு (தோலைச் சீவ வேண்டும்) சேர்த்து மையாக அரைத்து வெந்நீர் விட்டுக் கலந்து வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடிக்க கொடுத்தேன். எந்தவித பிரச்சினையும் இல்லை.
மிளகு கசாயம் செய்வது எப்படி?
சுமார் 10 மிளகை எண்ணெய் விடாமல் வெறும் பாத்திரத்தில் கருகுமளவு வறுக்க வேண்டும். அதன்பிறகு அந்த மிளகு மூழ்குமளவு தாராளமாக நீர் விட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். நன்றாகக் கொதித்து நீர் கால்வாசியளவுக்கு வற்றியதும் குடிக்க வேண்டும். இதை 2 மணி நேரத்துக்கு ஒருதடவை குடித்துவந்தால் காய்ச்சல் குணமாகும். ஆக, காய்ச்சலைத் தீர்ப்பதில் மிளகு முக்கியப் பங்கு வகிக்கிறது. கூடவே கறிவேப்பிலைக் குடிநீரும் கைகொடுக்கும்.
ஏலக்காயை மணமூட்டும் ஒரு உணவுப்பொருளாக மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், அதில் நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளன என்பது பலருக்கும் தெரியாத உண்மை. படிக்காதவர் என்றில்லை படித்த பல பேருக்கும்கூட வாய் நாற்றம் வந்து பாடாய்ப்படுத்தும்.
Must Read: காய்ச்சலிலின் போது கடைபிடிக்க வேண்டிய உணவு முறை என்ன தெரியுமா?
அப்படிப்பட்டவர்கள் வெறும் ஏலக்காயை வாயில் போட்டு மென்று வந்தால் நாற்றம் விலகுவதோடு, பல், வாய் தொடர்பான பல்வேறு நோய்கள் விலகும். இது மழைக்காலம்... இருமல், சளி என பாடாய்ப்படுத்தும். இருமல் தொந்தரவு இருந்தால் வெறும் வாயில் ஏலக்காயைப்போட்டு மென்று தின்றால் இருமல் மட்டுமின்றி குத்திருமலும் சரியாகும். இதன்மூலம் பசி எடுப்பதோடு ஜீரண உறுப்புகள் பலப்படும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டிருந்தால் ஏலக்காயை பொடியாக்கி நெய் சேர்த்து மசித்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
- எம்.மரிய பெல்சின், 9551486617
#CureFromFever #CureFromCough #PattiVaithiyam
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments