சர்ச்சைக்கு உள்ளான அடையாறு ஆனந்தபவன்… இப்போதைய விற்பனை எப்படி?
பிரபல நடிகரும், இயக்குநருமான சித்ரா லட்சுமணன் நடத்தி வரும் டூரிங் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனலுக்கு அடையாறு ஆனந்தபவன் ஏ2பி ரெஸ்டாரெண்ட் உரிமையாளர் திரு.சீனிவாச ராஜா கொடுத்த பேட்டியால் பெரும் சர்ச்சை எழுந்தது. ஒரு சமூகத்தின் ஆதிக்கத்தில் இருந்த உணவகத்தொழிலில் பெரியார் என்ற ஆளுமையின் தாக்கத்தால் தானும் வெற்றி பெற்றதாக அந்த பேட்டியில் அவர் கூறியிருந்தார்.
இது குறிப்பிட்ட சமூகத்தினர் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஏ2பி உணவகத்தை புறக்கணியுங்கள் என்ற ஹேஷ்டேக் வைரல் ஆனது. இதற்கு எதிராக பெரியார் ஆதரவாளர்கள் முன்னெடுத்த அடையாறு ஆனந்தபவன் ஏ2பியில் உண்ணுவோம் என்ற ஹேஷ்டேக்கும் வைரல் ஆனது.
சமூக வலைதளங்களில் இருதரப்பும் மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில் அதன் தாக்கத்தால் அடையாறு ஆனந்தபவன் ஏ2பி கிளைகளில் விற்பனை அதிகரித்திருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா என்ற கேள்வி நமது மனதில் எழுந்தது.
Must Read: சொமாட்டோவின் கோல்டு திட்டத்துக்குப் போட்டியாக ஸ்விக்கியின் லைட்
இதையடுத்து சென்னை தியாகராயநகர் பாண்டி பஜார் பகுதியில் உள்ள அடையாறு ஆனந்தபவன் ஏ2பி உணவகத்துக்கு ஒரு வாடிக்கையாளரைப்போல சென்றோம். காலை 10 மணிக்கு எப்போதும் போன்ற சூழலிலேயே உணவகம் காணப்பட்டது. இலங்கையில் இருந்து தி.நகருக்கு ஷாப்பிங் வந்த ஒரு புலம் பெயர் தமிழ் குடும்பத்தினர் குழந்தைகளுடன் சாப்பிட வந்தனர்.
நடுத்தர வயதில் இருந்த கணவன், மனைவி வந்தனர். இருவரும் வீட்டில் பூஜை முடித்து விட்டு, காலை உணவு உண்பதற்காக உணவகம் வந்தது தெரிந்தது. இன்னொரு புறம் சிலர் இனிப்பு, காரம் உள்ளிட்ட பலகாரங்களை வாங்கிக் கொண்டிருந்தனர். ஸ்விக்கி, சொமாட்டோ பனியன் போட்ட டெலிவரி ஆட்களும் உணவகத்துக்குள் வந்து டெலிவரிகளை பரபரப்பாக வாங்கிச் சென்றதை பார்க்கமுடிந்தது.
நாம் உணகவகத்தில் மேற்பார்வையாளராக இருந்த பெண் ஊழியரிடம், உங்கள் உணவகத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட செய்திகள் வந்திருக்கிறதே என்று கேட்டோம். அதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்துவதில்லை சார் என்றார்
Must Read: ஆரோக்கியமான உணவு பொருட்களை தெரிந்து கொள்ளுங்கள்...
இப்படி வந்த செய்திகளால் விற்பனையில பாதிப்பு இருக்கிறதா என்று கேட்டோம். விற்பனை கூடவும் இல்லை. குறையவும் இல்லை எப்போதும்போல்தான் இருக்கிறது. சமூக வலைதள செய்திகளால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார்.
உணவகத்துக்கு வெளியே ஸ்விக்கி ஊழியர் ஒருவரிடம் பேசியதில், எங்களுக்கு வழக்கம்போலதான் ஆர்டர் வருதுங்க சார். எப்போதும்போல அடையாறு ஆனந்தபவன் பி2பி மெனுக்களுக்கு ஆர்டர் வந்துக்கிட்டுத்தான் இருக்கு. குறைந்தமாதிரி தெரியவில்லை, என்றார்.
சமூக வலைதளங்கள் எனும் தனி உலகில் நீங்கள் என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். உணவுக்குள் ஏன் பாஸ் அரசியலைக் கொண்டு வர்றீங்க என்பதே வாடிக்கையாளர்கள் கேள்வியாக இருக்கிறது
#A2BRestaurants #foodpolitics #supportA2B
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments