லேட்டஸ்ட் வேளாண், உணவு செய்திகள்….
தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் அமைக்கப்பட்டுள்ளன 25 உழவர் சந்தை வளாகங்களில் தொன்மை சார் உணவகம் என்ற உணவகங்கள் அமைக்கப்படும் என்று வேளாண்மைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் வேளாண்மை நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது அதில் தொன்மை மிக்க ஊட்டச்சத்து நிறைந்த, சிறுதானிய கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகள் போன்ற உணவுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ளும் வகையில் உழவர் சந்தை வளாகங்களில் தொன்மை சார் உணவகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பின்படி கோவை, மதுரை, உள்ளிட்ட இடங்களில் உள்ள உழவர் சந்தை வளாகங்களில் தொன்மை சார் உணவகங்கள் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மட்டுமே இந்த உணவகங்கள் செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Must Read: வேளாண் விளை பொருட்களை இணையத்தில் விற்க உதவும் அக்ரிசக்தி
செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்
சேலம் சின்ன கடைவீதி அரசு மரத்துப் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள மாம்பழ குடோன்களில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கதிரவன் மேற்கொண்ட ஆய்வில் அதிக அளவு எத்திப்பான் ரசாயனத்தை தெளித்தும் நேரடியாக மாம்பழங்களின் மீது வைத்து பழுக்க வைப்பதும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து ஐந்து டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மாம்பழங்களை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது.
Must Read: வானகத்தில் உங்கள் குழந்தைகளுக்கான ஒருவாரகால பயிற்சி
காலை உணவு திட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பணி
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு தயாரிக்க மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மகளிர் சுய உதவி குழுவில் சேர்ந்து 3 ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். 5 ஆண்டுகளில் கடன்களை தவணை தவறாது செலுத்தியிருக்க வேண்டும். குழு உறுப்பினர் அதே ஊராட்சியில், பேரூராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்டநிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு வரை படித்திருப்பதுடன் உணவு சமைப்பதில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
#ulavarsanthaiunavagaam #ulavarsanthai #thonmaisarunavagam
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments