50 நாட்கள் இயற்கை வேளாண் பயிற்சி


இயற்கை வேளாண் நிகழ்வுகள் 

இயற்கை வாழ்வியல் பயிற்சிகள் 

இயற்கை வேளாண் விவாதங்கள்

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் இயற்கை வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை arokyasuvainews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை. 

'வள்ளுவம் இயற்கை வேளாண் வாழ்வியல் நடுவம்' நடத்தும் 50 நாட்கள் இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்  

100 விதமான காய்கறி, கீரைகள் விதைப்பு முதல் அறுவடை வரை கற்போம் 

இப்பயிற்சியில் :மண்வள மேம்பாடு , பாத்தி அமைத்தல் , காய்கறி சாகுபடி , பழ மர வன மர சாகுபடி நுட்பங்கள், கால்நடை பராமரிப்பு ,விதை நேர்த்தி செய்தல் நாற்றுப் படுக்கை அமைத்தல் மற்றும் விதைப்பு முறைகள், மரபு விதை சேகரிப்பு மற்றும் பரவலாக்க வழிமுறைகள் குறித்த பயிற்சிகள் அளிக்கப்படும்.  

50 நாட்கள் இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்

இயற்கை இடுபொருட்கள்  தயாரிப்பு மற்றும் தெளிப்பு முறைகள்,  பூச்சி கட்டுப்பாட்டு  முறைகள் மற்றும் பயிர் பாதுகாப்பு வழிமுறைகள், பண்ணைப் பொருளாதாரம் திட்டமிடுதல், மதிப்புக்கூட்டல் மற்றும் சந்தை படுத்தும் வழிமுறைகள்,  நிரந்தர வேளாண்மைக்கான நுட்பங்கள, ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு முறைகள்,முன்னோடி இயற்கை வேளாண் பண்ணைகள் பார்வையிடல் ஆகியவை இடம்பெறும் .

பயிற்றுநர்கள் : வானகம் வெற்றிமாறன்.இரா மற்றும் குழுவினர் .

Also Read: ஆகஸ்ட் 28; இன்றைய இயற்கை வேளாண் சந்தை

முன்பதிவு அவசியம் : தொடர்புக்கு : 8610457700 / 9566667708 , பயிற்சி துவக்க காலம்   செப்டம்பர் 12 - 2021 (ஞாயிறு) பயிற்சி பங்களிப்பு நபருக்கு ₹5000 (உணவு தங்குமிடம் உட்பட)

பயிற்சி நிகழ்விடம் :  வள்ளுவம் இயற்கை வேளாண் வாழ்வியல் நடுவம், நம்மாழ்வார்புரம் , குளத்துப்பட்டி , நிலக்கோட்டை , திண்டுக்கல் மாவட்டம்  - 624208 .

இயற்கை வேளாண்மையுடன்,  இயற்கை மருத்துவம் , வாழ்வியல் கல்வி ,  சூழலியல் சார்ந்த உரையாடல்கள் புத்தக வாசிப்பு  என களப்பயிற்சி வழியாக தற்சார்பை நோக்கி பயணிப்பவர்கான களம் காத்திருக்கிறது 

#AgriEvents #OrganicTraining #NaturalLife .

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை

எங்களைப் பின்தொடர: முகநூல்  , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

 


Comments


View More

Leave a Comments