உடம்புக்கு என்ன தேவை என்பதை கவனித்துக் கேளுங்கள்….


உலகில் மிக அதிகமாக விவாதிக்கப்படாத ஒரு பிரச்சினை இது.இந்தியாவில், பால் உற்பத்தியைப் பன்மடங்கு அதிகரித்த, ‘வெண்மைப் புரட்சி’, என்னும் அரசு திட்டத்தை நிறைவேற்றிய டாக்டர் குரியன், ‘பால் ஒவ்வாமை’, கொண்டவர்.

மலையும், மலை சார்ந்த நிலமுமான கேரளத்தில், பாலுக்காக மாடுகளை வளர்த்தல் ஒரு முக்கியமான வாழ்வியல் அல்ல..’கட்டன் சாயா’, ஏன், கேரளத்தின் மிக முக்கியமான பானமாக இருக்கிறது என்பதன் பின்னணி இதுவாக இருக்கலாம்.

Must Read: விவசாயி பிச்சாண்டியின் நேரடி கீரை விற்பனை

நான் குழவியாக இருந்த போது, ஒரு தீயுழ் கணத்தில், என் பெற்றோர் எனக்கு எருமைப் பாலைப் புகட்ட முயன்றனர்.   அந்த முயற்சி பெரும் தோல்வியில் முடிந்து, நான்  சென்னை பாஷையில் சொல்வதெனில் கிட்டத்தட்ட ‘பூட்ட கேஸ்’, ஆனேன். பால் எனக்கு பெரும் சோதனையாக இருந்தது. 

வேளாண் குடும்பத்தில் பிறந்து பாலைக் குடிக்க முடியாத நான் பெரும் கேலிக்கு உள்ளானேன்..பின்னர் தொழில் வாழ்க்கையில் ஒரு பகுதியாக தில்லி சென்று பணியாற்றும் சூழல் உருவாகியது. அங்கே கோதுமை சார் உணவு  எனக்குத் தெரியாத சிக்கல்களை உருவாக்கியது.  

உணவு ஒவ்வாமை

என சூழல் அரிசியும், இறைச்சியும்.. பாலும் கோதுமையும் என் சூழலில் முக்கியமில்லாத உணவுகள்.. எனவே பிரச்சினை நான் அல்ல. வெளியில் இருந்து வந்த உணவுகள் பாலும், கோதுமையும் என் உடலுக்கு ஓவ்வாதவை என்பதை நான் உணரவேயில்லை..

இவையிரண்டையும் சீரணிக்க இயலாத பலவீனன் என்னும் பெரும் சுய தன்னிரக்கத்தில் ஆழ்ந்தேன். புத்திசாலித்தனத்தில் எந்த விதத்திலும் குறைவில்லாத நான், இந்த உணவு ஒவ்வாமையின் காரணமாக பெரும் தாழ்வுணர்ச்சியில் வீழ்ந்தேன்.

பின்னர் பல காலம் கழித்து, குல்வந்த் சிங் என்னும் ஒரு உணவுத் தொழில் நுட்பம் சொல்லித்தந்த சீக்கியர் என்னை இதில் வழி நடத்தினார்.மனித உடல் என்பது ஒரு விலங்கின் உடல். அதற்கு என்ன தேவை எனத் தெரியும்.  அது தேவையற்றது என்றும் புரியும்.. கொஞ்சம் கவனித்துக் கேள்’, என்று சொன்னார். 

Must Read: உணவு எண்ணெயில் வைட்டமின் இருக்கு என்பதெல்லாம் உடான்ஸ்…

எனக்கு ஒவ்வாத உணவை உடல் எனக்கு மிகத் தெளிவாகச் சொல்லி விடுகிறது. உணவுக் குழல் எரிச்சல் அதன் முதல் செய்தி. எந்தெந்த உணவுகள் எல்லாம் என் உடலைத் தொந்தரவு செய்ய வில்லையோ, அவையெல்லாம் நல்லது. அவற்றுள் நம் வாழ்க்கை முறைக்குத் தேவையான மாவுச்சத்து, புரதம், கொழுப்பு போன்றவற்றை திட்டமிட்டு உண்போம்.

விளம்பரங்கள் சொல்கின்றன என்பதற்காக பீஸாவையோ, பிரியாணியையோ உண்டு சிரமப்பட வேண்டாம். எனக்கு மிகவும் பிடித்த ஒரு சிந்தனையாளர் சொன்னார் - ‘Life can be very simple. It takes enormous human efforts to complicate it'. முதலாளித்துவம் அதைத்தான் செய்கிறது. இன்று உலகில் மிகவும் பேசப்படாத ஒன்று - Inflammatory Bowels Disease (IBD) என்னும் ஒரு உடல் உபாதை. இது தொடர்பாக, இந்த இடர்பாட்டை எதிர்கொள்ளும் மதுரா பாலசுப்ரமணியம் அவர்களின் இந்தக் காணொளி முக்கியமான ஒன்று கேளுங்கள்.

-பாலசுப்பிரமணியம் முத்துச்சாமி

#alergiticfood  #unhealthyfood #goodfood #healthyfood

TRENDING;  மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்குஜொமாட்டோ அடாவடி,  தேன்சாப்பிடும் முறை


Comments


View More

Leave a Comments