வானகம் நடத்தும் ஒரு மாத இயற்கை வழி வாழ்வியல் பயிற்சி பிப்ரவரி 3-ல் தொடக்கம்


வேளாண் பயிற்சி முகாம்கள் 

வேளாண் மதிப்புக்கூட்டல் பயிற்சிகள் 

மரபுவழி பயிற்சிகள் 

உணவுத்திருவிழாக்கள் 

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். 

Also Read: திருப்பூரில் கொரோனா தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கு உணவு டெலிவரி

இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை arokyasuvainews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.

ஒரு மாத இயற்கை வழி வாழ்வியல் பயிற்சி

வானகம் நடத்தும் ஒரு மாத இயற்கை வழி வாழ்வியல் பயிற்சி பிப்ரவரி 3ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சியில்  இயற்கை வழி வேளாண்மை, மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல், மழை நீர் அறுவடை,உயிர்வேலி, ஒருங்கிணைந்த பண்ணை, இடுபொருள் செய்முறை பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. 

ஒரு மாத இயற்கை வேளாண்மை பயிற்சி

இது தவிர களப்பயிற்சி, வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம், கால் நடை பராமரிப்பு, நிலங்களைதேர்வு செய்தல், காடு வளர்ப்பு, மரபு விளையாட்டு ஆகியவை இடம்பெறும்.வானகம் கல்விக் குழுவினர் பயிற்சியை வழங்குவார்கள்.வானகம்”நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம், சுருமான்பட்டி, கடவூர்,கரூர் மாவட்டம் என்ற முகவரியில் பயிற்சி நடைபெற உள்ளது. தங்குமிடம் உணவு வழங்கப்படும்.பயிற்சியில் பங்கேற்பதற்கு முன்பதிவு அவசியம். .+91 8825810072 என்ற மொபைல்போனில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும். ஒரு மாதத் தன்னார்வலர் பயிற்சியை முடித்தவர்கள் மூன்று மாத இயற்கை வேளாண்மை பயிற்சி மேற்கொள்வதற்கு வழிமுறைகள் வகுக்கப்படும்.

Also Read: துத்தி கீரை சாப்பிட்டால் அஜீரணக்கோளாறு நீங்கும், உடல் சூடு குறையும்…

வெளியிலிருந்து கொண்டுவரும், உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது,  பாலித்தின் பைகள்,சோப்பு, ஷாம்பு,பேஸ்ட்,கொசுவர்த்தி போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.

பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.https://vanagam.org   https://vanagam.page.link/app

அடுப்பில்லாத சமையல் ஒருநாள் பயிற்சி 

மதுரையில் *வானகம் & தான்யாஸ் இயற்கையகம்* இணைந்து நடத்தும் *அடுப்பில்லாத சமையல் & மாடித்தோட்டம் வீட்டுத்தோட்டம் பயிற்சி* என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி வரும்: 26ம் தேதி புதன்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. 

தான்யாஸ் இயற்கையகம் , MABIF வளாகம், மதுரை வேளாண் கல்லூரி ,  மதுரை .என்ற முகவரியில் பயிற்சி  நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில்.அடுபில்லா ஆரோக்ய சமையல் என்ற கருத்தாக்கத்தில் சமைக்காத பிறந்தநாள் கேக், சமைக்காத இட்லி,கொய்யா சட்னி,தக்காளி சோறு,தேங்காய்ப்பால் தயிர் சாதம்,பீட்ரூட் ஊறுகாய், இனிப்பு லட்டு,அவுல் பாயாசம், பசும்பொறியல்,இனிப்பு வெண்டை,வென்பூசணி கீர். ஆகியவை குறித்து பயிற்சி வழங்கப்படும்.  இயற்கையாளர். கும்பகோணம் ரமேஷ் பயிற்சி அளிக்க உள்ளார். 

மதுரை ஒரு நாள் பயிற்சி 26ம் தேதி நடைபெறும்

மாடி தோட்டம் வீட்டுத்தோட்டம் பயிற்சியில்  நல் உணவை நம் வீட்டிலிருந்தே பெறுதல், வீட்டுத்தோட்டம் மாடித் தோட்டம் எளிய ‌வடிவமைப்பு முறைகள், விதைப்பு முதல் விதைப்பு வரை பராமரிப்பு முறைகள், வீட்டு காய்கறி கழிவுகளை உரமாக்குதல், இயற்கை இடுபொருட்கள் பயன்பாட்டு முறைகள் ஆகியவை குறித்து பயிற்றுநர் வானகம் வெற்றிமாறன்.இரா பயிற்சி அளிக்க உள்ளார். 

Also Read: பசி உணர்வை கட்டுப்படுத்த உலர் பிளம்ஸ் சாப்பிடுவது நல்லது

பயிற்சி பங்களிப்பு ஒரு நபருக்கு ரூ.700 வசூலிக்கப்படும். முன்பதிவு அவசியம். 9843886628 / 9566667708  என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும்.  பயிற்சி பங்கேற்பாளர்களுக்கு நாட்டு விதைகள் வழங்கப்படும் / மதிய உணவாக சமைக்காத இயற்கை உணவு வழங்கப்படும்.இனிமையான இயற்கை வாழ்வியல்  செழுமைகள் பகிர்வோம் .நல் உணவும்.நல வாழ்வும்.வளமான சூழலுமாக.பசுமை சமூகமாவோம்.

#AgriEvents #OrganicTraining #NaturalLife #FoodFestivals #AgriEventsAtKovai 


Comments


View More

Leave a Comments