ஓஎன்டிசி தளத்தில் இணைக்கப்படும் தெரு உணவு விற்பனையாளர்கள்…


மத்திய அரசின் ஆதரவுடன் செயல்படும் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான ஓபன் நெட்வொர்க்  தளம் டெல்லி மற்றும் லக்னோவில் தெரு உணவு விற்பனையாளர்களை தமது தளத்தில் பரிசோதனை அடிப்படையில் இணைக்க உள்ளது. 

டெல்லி மற்றும் லக்னோவில் அடுத்த 1-2 மாதங்களில் 500 தெரு உணவு விற்பனையாளர்கள் ஓஎன்டிசி திட்டத்தில் இணைக்கப்பட உள்ளனர். இந்த சோதனை முயற்சியின் வெற்றியைத் தொடர்ந்து, நாட்டின் அனைத்து நகரங்களிலும் உள்ள தெரு உணவு விற்பனையாளர்கள் ஓஎன்டிசி தளத்தில் இணைக்கப்படுவர். 

ஓஎன்டிசி கட்டமைப்பில் வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு முறைகளை உருவாக்க உள்ளனர். டெல்லியில், பரிசோதனை முயற்சியின் கீழ் தெரு உணவு விற்பனையாளர்களை ஒஎன்டிசியில் இணைக்கும் முயற்சியில் ஜொமாட்டோ உணவு விநியோக செயலியின் ஆதரவு பெற்ற மேஜிக்பின்  என்ற நிறுவனத்தின் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

தெரு உணவு விற்பனையாளர்கள்

அதன்படி டெல்லி சாகேத் பகுதியில் உள்ள கிருஷ்ணா சாட் பண்டார் மற்றும் ப்ரீ பிளேட்ஸ் என்ற இரண்டு பிரபல தெரு உணவகங்கள் ஓஎன்டிசியுடன் இணைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் மட்டும் 100க்கும் மேற்பட்ட தெரு உணவகங்கள் இணைக்கப்பட உள்ளன. .

இது தவிர மேஜிக்பின் நிறுவனம் தெரு உணவு விற்பனையாளர்களுக்கு தங்களது  பிரதிநிதிகள் மூலம் விரிவான பயிற்சியை அளிக்கும், டிஜிட்டல் முறையில் விற்பனை செய்வது எப்படி, பணம் பெறுவது எப்படி, வங்கி சேவைகளை எப்படி இணைப்பது என்பது குறித்தும் பயிற்சி அளிக்க உள்ளனர். பிற நகரங்களிலும் தெரு உணவு விற்பனையாளர்கள் இணைக்கப்பட்டால் ஓஎன்டிசி தளத்தில் உள்ள ஒரு கோடி வாடிக்கையாளர்களின் ஆதரவை தெரு உணவகங்கள் பெற முடியும்.  

Must Read: 1.8 கி.மீக்கு ரூ.150 டெலிவரி கட்டணம் வாங்கிய ஸ்விக்கி

இது குறித்து பேசிய மேஜிக்பின் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான அன்ஷூ ஷர்மா, "அடுத்த 3-6 மாதங்களுக்குள் டெல்லி மற்றும் லக்னோவில் எப்எஸ்எஸ்ஏஐ அங்கீகாரம் பெற்ற  500 தெரு வியாபாரிகளை இணைக்கும் நோக்கில் பரிசோதனை முயற்சி தொடங்கியிருப்பதாக கூறினார். 

டெல்லி, லக்னோ நகரங்களில் இந்த பரிசோதனை முயற்சிகள் வெற்றியடையும் பட்சத்தில் தென்மாநிலங்களில் சென்னை உள்ளிட்ட நகரங்களின் தெரு உணவு விற்பனையாளர்களும் ஓஎன்டிசியில் இணைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

-பா.கனீஸ்வரி 

#MagicPin #ONDC #streetfoods

ரோக்கியசுவை அங்காடியில் பொருட்கள் வாங்க இங்கே கிளிக் செய்யவும்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments