எண்ணெய் தடவல், எண்ணெய் குளியலால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?


வேலூர் ஶ்ரீபுற்றுமகரிஷி சித்த மருத்துவ சேவை மையத்தைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் பாஸ்கரன். தற்போது இம்ப்காப்ஸ் இயக்குனராக இருக்கிறார். ஶ்ரீபுற்றுமகரிஷி பாரம்பரிய மருத்துவ மையத்தின் வழிவந்த இவர் அங்கு சிறுவயது முதல் பாரம்பரிய மருத்துவமும் கற்றுத்தேர்ந்தவர் ஆவார். இத்தகைய சிறப்புமிக்க மருத்துவர் பாஸ்கரன் வாரந்தோறும் சென்னைக்கு வருகை தருகிறார். இவர் சர்க்கரை நோய், புற்றுநோய், குழந்தையின்மை , கல்லீரல் பாதிப்புகள் மற்றும் கைவிடப்பட்ட பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சை அளித்து வருகிறார். வாரந்தோறும் வியாழன்தோறும் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பாரதி தெருவில் ஆலோசனை வழங்குகிறார்.

மருத்துவர் பாஸ்கரனின் ஶ்ரீபுற்றுமகரிஷி சித்த மருத்துவ சேவை மையத்தில் குரு வழி பாரம்பரிய மருத்துவம் கற்றிருக்கும் நான் மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு எண்ணெய் தடவல் மற்றும் மூலிகை ஒத்தடம் அளிக்கிறேன். 

Must Read: உடம்புக்கு என்ன தேவை என்பதை கவனித்துக் கேளுங்கள்….

ஆத்மார்த்தமான இந்த சிகிச்சை இன்றைக்கு அவசியமாக இருக்கிறது. எண்ணெய் தடவல் குறித்து பலரும் கேட்டதுண்டு. இப்போது சென்னை மேற்கு மாம்பலத்தில் சித்த மருத்துவர் பாஸ்கரன் அவர்களது ஶ்ரீ புற்று மகரிஷி சித்த மருத்துவமனையில் அதற்கான இடவசதி செய்யப்பட்டுள்ளதால் அது சாத்தியமாகிறது.

நம்மில் பலர்  உடல் மற்றும் மன நலன் பற்றி சிந்திக்காமல், `வேலை வேலை' என்று சுற்றிக்கொண்டிருக்கிறோம். ஒரு சிலர் மட்டுமே வாரம் ஒருமுறையோ அல்லது மாதம் ஒருமுறையோ  உடல் மற்றும் மன நலனை சரிசெய்ய இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர். இதைக்கேட்டதும் காசு பணம் வேண்டாமா? என்று கேட்பது வாடிக்கை. நோய் முற்றிய நிலையில் பணம் செலவழிக்க தயங்காத நாம் அவை வராமல் முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கை எடுக்க தயங்குகிறோம்.

திரைப்படத்துறை மற்றும் பத்திரிகை சார்ந்து பணியாற்றும் நண்பர் ஒருவர் சில வாரங்களுக்கு முன்பு போன் பண்ணி அசிடிட்டி, வாய்வுக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகச் சொன்னார். குடிப்பழக்கம் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை உண்டதால் வந்த பிரச்சினை என்பது அவருக்கு தெரிந்தாலும் இப்போது அதிலிருந்து மீள வழி தேடிக்கொண்டிருக்கிறார். 

எண்ணைய் தடவல், எண்ணைய் குளியல் நல்லதுஇப்படி பலரும் பல்வேறுவிதமான இன்னல்களுக்கு ஆளாகி அதிலிருந்து நலம் பெற நினைத்தாலும் சரியான மருத்துவம் கிடைக்காமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் தீர்வாக, எண்ணெய் தடவல் சிகிச்சை நல்ல பலன் தரும். வெறுமனே எண்ணெய் தடவல் என்றில்லாமல் வர்ம புள்ளிகளை அழுத்திவிட்டு செய்வதால் கிடைக்கும்  பலன் அதிகம். 

சமீபத்தில்கூட என்னைப்போன்றே பாரம்பரிய மருத்துவத்தில் பயணிக்கும் பத்திரிகையாளர் நண்பர் சேதுராமன் தனக்குள்ள பிரச்சினைகளைச் சொன்னபோது எண்ணெய் தடவலும் கூடவே உணவில் கலந்து உண்ணக்கூடிய மூலிகைப்பொடி ஒன்றும் பலன் தரும் என்றேன். நாள் குறித்து எண்ணெய் தடவல் சிகிச்சை எடுத்துக்கொண்டதில் அவர் அடைந்த பலன்களை மகிழ்ச்சியாக பகிர்ந்துகொண்டார். 

நாம் மருத்துவம் செய்தாலும் நமக்குள்ள பிரச்சினைகளை சரிசெய்துகொள்ள வேண்டியிருக்கிறது. இவரைப்போலவே வர்மம், அக்குபஞ்சர் என பயணிக்கும் பிரபலமான அந்த மருத்துவருக்கும்கூட எண்ணெய் தடவல் அளித்தபோது அவர் புத்துணர்ச்சி பெற்றதாகக் கூறினார். 

Must Read: விவசாயி பிச்சாண்டியின் நேரடி கீரை விற்பனை

எண்ணெய் தடவல் மற்றும் எண்ணெய் குளியல் செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரித்து உடல் மற்றும் தசை வலி குறையும். இதனால் மனமும் இலகுவாக மாறுவதை உணர முடியும். உடலும் மனமும் அமைதியாக இந்த எண்ணெய் சிகிச்சை உதவும். வாய்வுக்கோளாறு, தூக்கமின்மை என பல பிரச்னைகள் சரியாகும். 

சிறுநீரகம் பழுதாகி கிரியாட்டின் அளவு அதிகரித்தவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதுடன் பூனைமீசை, மூக்கிரட்டை உள்ளிட்ட மூலிகைகளைக்கொடுத்து நல்ல முன்னேற்றம் கிடைத்திருக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு பாத சிகிச்சையின்மூலம் இயல்பு நிலைக்கு வந்திருக்கிறார்கள். 

இவைதவிர உணவே மருந்து, மருந்தே உணவு என்ற அடிப்படையில் மூட்டு வலியைப்போக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு மற்றும் பாரம்பரிய அரிசிகள், சிறுதானியங்களை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் ஆலோசனை வழங்குவதுடன் அவற்றை பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்கிறேன்.

-எம்.மரியபெல்சின் (தொடர்புக்கு; 9551486617)

#oilmassagetherapy #oiltherapy  #oilbath #benefitsoilbath

TRENDING;  மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்குஜொமாட்டோ அடாவடி,  தேன்சாப்பிடும் முறை

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments