பீரியட்ஸின் போது வயிற்று வலி வந்தால் இந்த எளிய வைத்தியத்தை கடைபிடித்தால் போதும்…


இன்றைய இளம்தலைமுறை மத்தியில் மாதவிடாய் ஒரு பேசுபொருளாக மாறியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.  வயது வித்தியாசமில்லாமல், ஏழை - வசதிபடைத்தவர் என்ற பாகுபாடின்றி பல பெண்களை பாடாய்ப்படுத்தி வரும் இந்த பாதிப்புக்கு  உயர்தர சிகிச்சைகள் செய்தும் பலன் கிடைக்காமல் என்ன செய்வதென்று தெரியாமலிருக்கின்றனர். 

இதோ... இந்த எளிய மருத்துவம் உங்களுக்குக் கைகொடுக்கும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. மாதவிடாய்க் காலத்தில் வயிற்றுவலியால் துடிக்கும் பெண்கள்,  21 துளசி இலைகளுடன் 5 மிளகு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் பிரச்னை சரியாகும். இதை மூன்று மாதத்துக்கு ஒவ்வொரு மாதவிடாய் நாள்களிலும் மாதவிடாய் வந்த மூன்று, நான்கு, ஐந்தாம் நாள்களில் சாப்பிட வேண்டியது அவசியம்.

Must Read: கெட்டுப்போன பிஸ்கெட் பாக்கெட்கள் விற்ற தியேட்டர் கேன்டீன் மீது நடவடிக்கை…

விளக்கெண்ணெயுடன் துளசிச் சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சம் சாறு சம அளவு எடுத்து காய்ச்சிக் கொண்டு 15 மில்லி அளவு உட்கொண்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் அகலும்.

மாதவிடாய் கோளாறுகளுக்கு

 

மாதவிடாய் சரியாக வெளிப்படாமல் வயிற்றுவலி உண்டாகும். அப்போது அடிவயிற்றில் விளக்கெண்ணெயைத் தடவி அதன்மீது ஆமணக்கு இலைகளை வதக்கி பொறுக்கும் சூட்டில் ஒத்தடம் கொடுத்து வந்தால் ரத்தப்போக்கு ஏற்பட்டு வயிற்றுவலி குறையும்.

மேலும் பொதுவாக பருவமடைந்த பெண்களுக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இது கர்ப்பப்பை தொடர்பான கோளாறுகளை சரி செய்யும். ஆனால் அந்த வழக்கம் நாளடைவில் குறைந்து வருவதே பல கர்ப்பப்பை பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது. மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள முடக்கத்தான்கீரை மிகவும் நல்லது. இந்தக் கீரையின் சாறு ஒரு டீஸ்பூன் சாப்பிட்டால் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகள் விலகும்.

அன்றாட உணவில் வெந்தயக்கீரை, வல்லாரை, பசலைக்கீரை போன்றவற்றை சேர்த்துக்கொள்வது நல்லது. வாழைப்பூ பொரியல், கூட்டு சாப்பிடுவதோடு வாழைப்பூவை நசுக்கி சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வரலாம். அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம். கானாம்வாழைக்கீரையுடன், அருகம்புல் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும். முயற்சித்து பாருங்கள்.

இதேபோல், மாதவிடாய் வர தாமதமாகும் பெண்களுக்கு எளிய வைத்தியம் உள்ளது. உத்தாமணி என்ற பெயரைக் கொண்ட வேலிப்பருத்தி மிகச் சாதாரணமாக வேலிகளில் வளரக்கூடியது. வேலிப்பருத்தி இலை ஆறு, மூன்று மிளகு சேர்த்து மையாக அரைத்து தொடர்ந்து 10 நாள்கள் சாப்பிட்டால், (குறிப்பிட்ட வயது வந்தும்) பருவமடையாத பெண்களுக்கு மாதவிடாய் வரத் தொடங்கும். வேலிப்பருத்தி இலைச்சாறுடன் தேன் சேர்த்து தினமும் ஒரு டீஸ்பூன் குடித்து வந்தால், மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் வயிற்றுவலி குணமாகும்.

- எம்.மரிய பெல்சின் (9551486617)

#PeriodsStomachPain   #PattiVaithiyamForPeriods  #ReliefFromPeriodsPain


Comments


View More

Leave a Comments