மூட்டு வலி தீர இதைவிட சிறந்த கிழங்கு வேறு ஏதும் இல்லை


மூட்டு வலியால் அவதிப்படும் அறுபதைத் தாண்டிய அந்த பெண்மணிக்கு முடவாட்டுக்கால் கிழங்கு அனுப்பி வைத்தேன். சூப் வைத்து குடிக்கச் சொன்னதுடன் ஃபீட் பேக் சொல்லும்படி சொன்னேன். வாய்வு நன்றாகப் பிரிந்தது என்று சொன்னார். ஒரே நாளில் எல்லாம் கிடைத்துவிடாது அல்லவா?

சரி விஷயத்துக்கு வருவோம். சூப் என்று சொல்வதைவிட ரசம் என்பது சரியான சொல்லாக இருக்கும். ஏனெனில் நமது சித்த மருத்துவத்தில் உணவே மருந்து, மருந்தே உணவு என்ற அடிப்படையில் அன்றாட உணவில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஏற்ப ரசம் சேர்த்துக்கொள்வது நலம் தரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்தவகையில் இந்த முடவாட்டுக்கால் கிழங்கு ரசம் நிறைய பலன்களை பெற்றுத்தரக்கூடியது.

Must Read: நோயுற்ற கால்நடைகளின் புகைப்படங்களை தொகுக்க அக்ரி சக்திக்கு கைகொடுங்கள்..

பொதுவாக ரசத்தில் சேர்க்கப்படும் சீரகம் வயிறு உப்புசம் உள்ளிட்ட பிரச்சினைகளைப் போக்கும்; பெருங்காயமும் வயிறு தொடர்பான கோளாறுகளை சரிசெய்யக்கூடியது. மல்லித்தழை செரிமானக்கோளாறுகளைப் போக்கும்; கறிவேப்பிலை சர்க்கரை நோய், சிறுநீரகக்கோளாறுகளைப் போக்கும்; வெள்ளைப்பூண்டு வாய்வு, ஆஸ்துமா, இதயக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளை சரிசெய்யும்; இஞ்சி... இருமல், நுரையீரல் பிரச்சினைகளை சரிசெய்யும்; மிளகு ஜலதோஷம், காய்ச்சலுக்கு நல்லது. இப்படி ரசத்தில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருட்களுக்கும் மருத்துவ குணங்கள் உள்ளன.

முடவாட்டுக்கால் சூப்

அற்புத பலன்கள் தரும் முடவாட்டுக்கால் கிழங்கு ரசம்

இதன் அடிப்படையில் முடவாட்டுக்கால் கிழங்குடன் மேலே சொன்ன சரக்குகளைச் சேர்த்து ரசம் வைத்துக் குடித்தால் முடக்குவாதம், மூட்டுவலி, மூட்டு வீக்கம், கழுத்துவலி, தோள்பட்டை வலி, முதுகுவலி சரியாகும். காய்ச்சல், செரிமானக்கோளாறுகள் போன்றவை சரியாவதுடன் ஆண்மைக்கோளாறு விலகும். ஆஸ்டியோபோரோசியா எனப்படும் எலும்பு அடர்த்திக்குறைவு பிரச்சினை உள்ளவர்களுக்கு இது அருமையான மருந்தாகும். முடவாட்டுக்கால் தேவைப்படுவோர் இந்த இணைப்பை கிளிக் செய்து ஆரோக்கிய சுவை அங்காடி இணையதளத்தில் பெறலாம்.

இந்த முடவாட்டுக்கால் கிழங்கில் சூப் செய்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். இதன் தோலை நீர் விட்டுக் கொதிக்க வைத்து குளித்துவந்தால் மூட்டு வலி, முடக்குவாதம் உள்ளிட்ட பிரச்சினைகள் சரியாகும். குறிப்பாக குழந்தைகளுக்கு வரும் வாதக்கோளாறுகளுக்கு நல்லது.

  - எம்.மரிய பெல்சின். 

(திரு. மரியபெல்சின் அவர்களை 9551486617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)

#JointPain  #JointPainTreatment  #Palsy  #Rheumatism #MutavattuKilankku #HerbalSoup

TRENDING;  மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்குதேன்சாப்பிடும் முறை

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments