கோவை சூலூரில் ஜனவரி 9ம் தேதி இயற்கைவழி வேளாண்மை நேரடிக் களப்பயிற்சி
வேளாண் மதிப்புக்கூட்டல் பயிற்சிகள்
வேளாண் பயிற்சி முகாம்கள்
மரபுவழி பயிற்சிகள்
உணவுத்திருவிழாக்கள்
தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.
Also Read: தினசரி உண்ணும் உணவுகளில் தீங்கு தரும் பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை arokyasuvainews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.
இயற்கைவழி வேளாண்மை நேரடிக் களப்பயிற்சி
செஞ்சோலை நடத்தும் ஒரு நாள் இயற்கைவழி வேளாண்மைநேரடிக் களப்பயிற்சி வரும் 09.01.2022 ஞாயிறு அன்று காலை 09.30 மணி முதல் மாலை 05.00 வரை நடைபெற உள்ளது. இதில், மண் வளப்படுத்துதல், நிரந்தரவேளாண்மை (மேட்டுப்பாத்தி , இருமடிப்பாத்தி), காய்கறி & கீரை சாகுபடி, கால்நடை பராமரிப்பு, இயற்கைவழி பயிர் ஊக்கிகள் தயாரிப்பு, ஒருங்கிணைந்த பண்ணையம்,பண்ணை வடிவமைப்பின் படிநிலைகள், பண்ணை நிர்வாகம் ஆகியவை குறித்து பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. மதிய உணவு & ஏற்பாடு செலவுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். 30 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என்பதால் அவசியம் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்ய செந்தில் குமரன் 9566665654, ஆவூர்.முத்து 9600873444 ஆகியோரை தொடர்பு கொள்ளவும். செஞ்சோலை இயற்கைவழி வேளாண் பண்ணை, கலங்கல் சாலை,சூலூர், கோவை என்ற முகவரியில் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் இடத்தை அறிய https://maps.app.goo.gl/9GeKqoa8iviNCCai8
#AgriEvents #OrganicTraining #NaturalLife #FoodFestivals #AgriEventsAtKovai
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
Comments