வானகத்தில் உங்கள் குழந்தைகளுக்கான ஒருவாரகால பயிற்சி
வானகத்தில் குழந்தைகளுக்கான ஒருவாரகாலப் பயிற்சியில் மழலைகள் இயற்கையோடு இணைந்த வாழ்வியலில் கலந்து களித்திட.. வான் பார்த்தல்... வனம் பார்த்தல்... நீர் பார்த்தல்... நிலம் பார்த்தல்... செடி வளர்த்தல் , மரம் அறிதல் போன்றவற்றில் ஈடுபடுத்தப்படுவர்.
பொம்மைகள் செய்தல் , கதை சொல்லிகளோடு கதையாடல் , மரபு விளையாட்டுகளை விளையாடி மகிழ்தல் , பனையோலை மடிப்பு கலை செய்தல் , மரபு கலைகளான சிலம்பம் சுத்துதல் பறையிசைத்தல் போன்ற பயிற்சிகளும் அவர்களுக்கு அளிக்கப்படும்.
குழந்தைகளுக்கான திரைப்பட திரையிடல் , கூத்து நாடகம் நடித்தல் , இயற்கை உணவுகளோடு அதன் உன்னதத்தை உணர்தல் ரசித்தல் என மழலைகள் தங்களின் விடுதலையை உணர்ந்திடவும் தன்னியல்போடு கொண்டாடவும் இந்த பயிற்சி ஒரு வாய்ப்பாக அமையும்.
Must Read: வேளாண் விளை பொருட்களை இணையத்தில் விற்க உதவும் அக்ரிசக்தி
குழந்தைகளுக்கான ஒருவாரகால பயிற்சி வரும் மே 21 ஞாயிறு காலை 10 மணி முதல் தொடங்குகிறது. மே 28ஆம் தேதி ஞாயிறு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. வானகத்தில் நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவம் , சுருமான்பட்டி , கடவூர் , கரூர் மாவட்டம் என்ற முகவரியில் பயிற்சி நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில் *நாட்டுப்புற கலை பழகுதல், இயற்கை வண்ண ஓவியம், தேங்காய் ஓடு கைவினை பயிற்சி, காகித மடிப்புக் கலை, இயற்கை வழி வேளாண்மை , வீட்டுத்தோட்டம், பாரம்பரிய மருத்துவம், இயற்கை உணவு தயாரிப்பு, மரபு விளையாட்டுகளுடன் கூடிய நாடக பயிற்சி, சிலம்பம், ஒயில் , யோகா, மற்றும் இயற்கையின் நுண்ணுணர்வை நோக்கிய கலந்துரையாடல்களும் , அறிவியல் அறிதல் செய்முறைப் பயிற்சியும் நடைபெறும்.
வெறும் நகரச் சூழலின் சத்தங்களையே கேட்டு வளர்ந்த நம் குழந்தைகளை சிலம்பின் வீச்சும், சலங்கையின் வெண்கல ஒலியும், ஒயிலாட்டம் மற்றும் பறையின் அதிர்வும், கரகத்தின் மெல் அசைவும் இப்பிரபஞ்சத்தின் சுயமான அக மன கொண்டாட்டத்தை நோக்கி கட்டாயம் கைபிடித்து கூட்டிச்செல்லும் அதன் கதகதப்பில் நம்மாழ்வார் அய்யாவின் இருப்பை அனைவரிடத்திலும் உணரலாம்.
Must Read:கோடையில் பூக்கும் இந்த பூக்களின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..
1. வெளியிலிருந்து கொண்டுவரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது , பாலித்தின் பைகள், சோப்பு , ஷாம்பு, பேஸ்ட், கொசுவர்த்தி போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது.
அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.
2. பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .
3.களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.
4. பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
எளிமையான தங்குமிடம் & சத்துமிகு இயற்கை உணவுகள் உட்படபயிற்சிக் பங்களிப்பாக 4,000 ரூபாய் வசூலிக்கப்படும். 8 வயது முதல் 14 வயது குழந்தைகள் மட்டுமே அனுமதி. பெற்றோர்கள் உடன் தங்க அனுமதி இல்லை. முன்பதிவு செய்ய : 86680 98492, 86680 98495, 94458 79292 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.
பயிற்சிக்கு வரும்போது புகைப்படம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கொண்டு வரவும் .நன்கொடையை Nammalvar Ecological Foundation A/C No: 137101000008277 , IFSC Code : IOBA0001371, Bank Name : Indian Overseas Bank, Branch Name : Kadavoor branch, karur district என்ற வங்கி கணக்கு எண்ணில் செலுத்தவும்.
பணம் செலுத்தியவுடன் தங்கள் முகவரி மற்றும் பணம் செலுத்திய விபரத்தை 8668098492 , 9445879292 இந்த கைபேசிக்கு குறுஞ்செய்தியாகவோ அல்லது whatsappற்கு அனுப்பவும். https://vanagam.org https://vanagam.page.link/app கடந்த வருடம் நடந்த பயிற்சியின் நிகழ்வைக் காண: https://www.youtube.com/watch?v=JxUluG92NJ4
#lifestyletriningforchildren #trainingforchildren #naturallifestyle
Comments