
திருப்பூரில் ஒருங்கிணைந்த பலபயிர் சாகுபடி முறை பயிற்சி
தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.
Must Read: அதிக இறைச்சியை உட்கொள்வது புற்றுநோய்க்கான ஆபத்தா?
இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை arokyasuvainews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.
ஒருங்கிணைந்த பலபயிர் சாகுபடி முறை பயிற்சி
ஆரோக்கியமான உணவு என்பது எப்படி ருசியாக சமைக்கிறோம் என்பதை பொருத்து மட்டுமல்ல எவ்வாறு காய்கறிகளை விளைவிக்கிறோம் என்பதிலும் இருக்கிறது.இயற்கையாக விளைவித்த காய்கறிகளில்தான் முழுமையான சத்துக்களும், நோய் வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள ஆற்றலும் கிடைக்கிறது.அப்படிப்பட்ட இயற்கை காய்கறிகளை விளைவிப்பது பெரிய வித்தை அல்ல...சிறிய இடமும் பெரிய மனமும் இருந்தால் போதும் நீங்களும் இயற்கை விவசாயி ஆக்கலாம்.
ஒருங்கிணைந்த பலபயிர் சாகுபடி முறையில் ஈடுபடுவது எப்படி என்று களத்தில் செய்து காட்டப்படும், கீரை வகைகள் பயிர் சாகுபடி,செடி வகைகள் பயிர் சாகுபடி, கொடி வகைகள் பயிர் சாகுபடி, மூலிகை வகைகள் பயிர் சாகுபடி, மரப்பயிர்கள் சாகுபடி முறை ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
இடுபொருள் தயாரிப்பு முறைகள், பூச்சி தாக்குதல் கட்டுப்பாடு முறைகள்,விவசாய நிலம் அடிப்படை வடிவமைப்பு முறைகள், *விற்பனை வாய்ப்பு ஒப்பந்தம் முறை ஆகியவை குறித்தும் பயிற்சியில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
Must Read: இன்னமும் அவிழ்க்கப்படாத சித்த மருத்துவ மூலிகைகள்
மௌனம் இயற்கை பாடசாலை, செம்பருத்தி பார்ம்ஸ், திருப்பூர் என்ற முகவரியில் வரும் 20ம் தேதி ஞாயிறு கிழமை காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சிக்காகவும் மதிய உணவுக்காகவும் நுழைவு கட்டணம் ரூ 600 மட்டும் வசூலிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்க @8508307617 என்ற மொபைல் எண்ணில் முன்பதிவு செய்யவும். பசுமை அ சுரேசு குமார் என்பவர் பயிற்சி அளிக்கின்றார்.
#AgriEvents #OrganicTraining #NaturalLife #FoodFestivals #AgriEventsAtTirupur
Comments