4 ஆம் தேதி கோவை மாவட்ட இயற்கை விளைபொருள் நுகர்வோர் கூட்டமைப்பு தொடக்கம்…
கோவை சூலூர்.செஞ்சோலை அமைப்பின் சார்பில் கோவை மாவட்ட இயற்கை விளைபொருள் நுகர்வோர் கூட்டமைப்பு தொடக்க விழா வரும் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. நுகர்வோர்களை ஒருங்கிணைத்தல், உழவர்களிடம் நேரடியாக விளைபொருட்களைப் பெறுதல், உழவர்கள்-நுகர்வோர் கூட்டு சமூகமாய் இயங்குதல் போன்ற பல பணிகளை நோக்கமாக கொண்டு இந்த அமைப்பு செயல்படும். இந்த நோக்கங்களின் அடிப்படையில் நிகழ்வுகளை செஞ்சோலை முன்னெடுக்கிறது.
Must Read: கீரைகளின் முக்கியத்துவத்தை சொல்லும் கீரை மருத்துவமனை புத்தகம்…
நம்மாழ்வார் ஐயாவுடன் நீண்ட காலம் பயணித்தவரும், இயற்கைவழி உழவாண்மை செயல்பாட்டாளருமான திரு.அறச்சலூர்.செல்வம் அவர்கள் பங்கேற்று இந்த அமைப்பின் நோக்கம் & செயல்பாடுகளின் முக்கியத்துவம் குறித்து உரைநிகழ்த்துகிறார்.
இயற்கை வாழ்வியலாளர்கள், மக்கள் நல மருத்துவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள் என அனைவரையும் செஞ்சோலை அன்புடன் அழைக்கிறது. கோவைமாவட்ட இயற்கை விளைபொருள்-நுகர்வோர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் செஞ்சோலை வேண்டுகோள் விடுக்கிறது. .
இயற்கைவழி உழவர்களுடன் கரம் கோர்க்க வரும் 04 ஆம் தேதி ஞாயிற்று கிழமையை மறந்து விடாதீர்கள். அன்றைய தினம் காலை 09.30 முதல் மதியம் 01.30 வரை நிகழ்வுக்கு வாருங்கள். நிகழ்வில் பங்கேற்க முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்ய செந்தில் குமரன் அவர்களை 9566665654 என்ற எண்ணிலும் அல்லது ஆவூர்.முத்துவை 9600873444 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
G-18 அறக்கட்டளை வளாகம், 7-வது குறுக்கு வீதி, எல்லைத்தோட்ட சாலை, பீளமேடு, கோவை.என்ற முகவரியில் நிகழ்வு நடக்கிறது. நிகழ்வுக்கான கூகுள் வரைபட உதவிக்கு https://maps.app.goo.gl/Fd5rhYv5Hbx9WFLK8 என்ற இணைப்பை சொடுக்கவும்.
#AgriEvents #AgriEventsKovai #AgrMeeting #FarmersAndConsumersMeets
Comments