காலை உணவை தவிர்ப்பது நல்லதல்ல…
பிரேக் பாஸ்ட் என்று ஆங்கிலத்தில் சொல்வதன் பொருள் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்து விட்டு காலையில் சாப்பிடுவதை குறிப்பதாகும். தினமும் இரவு எட்டு மணி அல்லது பத்து மணிக்கு இரவு உணவு சாப்பிட்டு விட்டு படுத்தால் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் கழித்துத்தான் காலையில் எழுகின்றோம். காலையில் எழுந்ததும் முதலில் சாப்பிடும் உணவைத்தான் ஆங்கிலத்தில் பிரேக்பாஸ்ட் என்று சொல்கின்றனர்.
எனவே, காலை உணவு என்பது முக்கியமானது, இன்றியமையாதது. நமது உடல் தினமும் புத்துணர்ச்சியோடு இருப்பதற்கு இந்த காலை உணவுதான் முதல் ஆதாரமாக மற்றும் ஆற்றலாக விளங்குகிறது.
காலை உணவாக என்னவெல்லாம் சாப்பிடலாம்?
புரதம், கார்போஹைட்ரேட், போன்ற சத்துகள் மிகுந்த பாரம்பர்ய உணவு வகையான ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம் போன்ற உணவு வகைகளை உண்ணலாம்.
Must Read: சைதை மாரி ஹோட்டல் உரிமையாளர் கண்டுபிடித்த வடகறி
மாவால் செய்யப்பட்ட இன்னொரு உணவு வகையான தோசையும் காலை நேரத்தில் உடல்நலத்துக்கு ஏற்றது. தோசை மாவில் உள்ள உளுந்து பல்வேறு சத்துப் பொருட்களைக் கொண்டுள்ளது. தோசையுடன் தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடுவதால் தேங்காயில் உள்ள வைட்டமின்கள் நமக்கு கிடைக்கின்றன.
கார்போஹைட்ரேட், புரோட்டின் ஆகியவை கொண்ட இன்னொரு வகை உணவான பூரியை காலையில் சாப்பிடுவது நல்லது. மைதாவில் பூரி செய்வதற்கு பதில் கோதுமை மாவில் செய்து சாப்பிட்டால் உடல் நலத்துக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். பூரியுடன் உருளைகிழங்கு தொட்டுக் கொண்டு சாப்பிடுவதால், ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உருளைக்கிழங்கில் புரோட்டின் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர். .
காலை நேர உணவுகளைப் பெரும்பாலும் நன்றாக வேகவைத்து சாப்பிடுவதே சிறந்தது. பூரி, தோசை போன்றவற்றில் அதிக எண்ணைய் இல்லாமல் சமைப்பதும், சாப்பிடுவதும் சிறந்த பலனைத் தரும். அவசரகதியில் உணவு சமைக்க நேரமில்லை என்று சொல்பவர்கள் அவல், வாழைப்பழம், பழங்கள் போன்றவற்றை மட்டும் கூட காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். காலை உணவை தவிர்க்கக் கூடாது என்பதே முக்கியமான செய்தியாகக் கொள்ள வேண்டும்.
-பா.கனீஸ்வரி
#DontSkipBreakFast #MorningFoodMust #MustEatMorning
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments