பாரம்பர்ய முறையிலான திண்பண்டங்கள் எப்படி செய்வது என்று தெரியுமா?


பீட்சா,பர்கர், நூடூல்ஸ், கிரில் சிக்கன் என்று நம் வயிற்றையும் அதன் விளைவாக நம் உடலையும் பாழ்படுத்தும் திண்பண்டங்கள் தினந்தோறும் வருகின்றன. இவைதான் திண்பண்டங்கள் என்ற பெயரில் ஊடகங்களில் விளம்பரமாகவும் வருகின்றன. எனவே, இது போன்ற திண்பண்டங்களுக்கு  நமது மக்கள் குறிப்பாக நம் குழந்தைகள் அடிமை ஆகி வருகின்றன.

நமது பாரம்பர்யமான உணவு பழக்கங்களில் இந்த உணவுகள் இதற்கு முன்பு இருந்ததே இல்லை. மரபு ரீதியான திண்பண்டங்கள் தேன்குழல், கை முறுக்கு, அதிரசம் என்று திண்பண்டங்கள் இருந்தன. இன்னும் கூட இருந்து வருகின்றன. ஆனால், பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.

 

பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் முயற்சி

பாரம்பர்ய திண்பண்டங்கள் குறித்து பயிற்சி

செஞ்சோலை இயற்கை வழி வேளாண் பண்ணை நடத்துகிறது

 

பாரம்பர்ய திண்பண்டங்களின் தயாரிப்பை அதிகப்படுத்தும் நோக்கில் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள செஞ்சோலை என்ற அமைப்பு பாரம்பர்ய திண்பண்டங்கள் தயாரிப்பு குறித்து அவ்வப்போது பயிற்சிகள் அளித்து வருகிறது. இந்தப் பயிற்சிகளில் தேன்குழல் (கரும்பு சர்க்கரையில் செய்யப்பட்ட ஜிலேபி) தூயமல்லி கை-முறுக்கு, கரும்பு சர்க்கரை லட்டு உள்ளிட்டதிண்பண்டங்களை செய்வது எப்படி என்பது என்பது குறித்து பயிற்சி கொடுக்கின்றனர். கடைசியாக இந்த பயிற்சி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. பயிற்சி பங்குபெறுவோர், இது போன்ற பராம்பர்ய முறையிலான திண்பண்டங்களை தயாரித்து உண்ண வேண்டும் என்பதே இந்த பயிற்சியின் நோக்கம் என்று பயிற்சியாளரப் ஆவூர் முத்து கூறுகிறார்.

இதுபோன்ற பயிற்சியில் பங்கு பெற விரும்புவோர் அல்லது பயிற்சியை தங்களது ஊரில் நடத்த விரும்புவோர் செஞ்சோலை இயற்கை வழி வேளாண் பண்ணை அமைப்பை (ஆவூர்.முத்து) 9600873444, (செந்தில் குமரன்) 8489750624 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறியலாம்.

-பா.கனீஸ்வரி

#HowToMakeSnacks   #Snacks  #TraditionalSnacks


Comments


View More

Leave a Comments