#7pointsforhealthy டயாபடிஸ் கண்டறிவது எப்படி?
1.உங்களுக்கு நீரிழிவு என்று கண்டறிய கட்டாயம் ரத்தப்பரிசோதனை அவசியமாகிறது.
2.காலை வெறும் வயிற்றில் ஒரு ரத்தப்பரிசோதனை மீண்டும் உணவு சாப்பிட்டு இரண்டு மணிநேரம் கழித்து ஒரு ரத்தப் பரிசோதனை கொடுக்க வேண்டும். Fasting blood sugar மற்றும் Post prandial blood sugar என்று இதை குறிக்கிறோம்.
3. நார்மல் மனிதருக்கு ஃபாஸ்ட்டிங் சுகர் 100 க்குள் இருக்க வேண்டும். சாப்பிட்ட பிறகு இரண்டு மணிநேரத்தில் 140 க்குள் இருக்க வேண்டும். இது நார்மல்.
4. காலை வெறும் வயிற்றில் 100 முதல் 125 க்குள் இருந்தால் சாப்பிட்ட பிறகு 140 முதல் 200வரை இருந்தால் இது க்ளூகோஸை உடல் கிரகித்தலில் ஏற்பட்டுள்ள இடர்பாடு என்று அறியலாம் Impaired Glucose Tolerance. இது நீரிழிவிற்கு சற்று முந்தைய நிலை.
Must Read: 5PointsForHealthy மலச்சிக்கலைப் போக்கும் கசகசா
5. இத்தகையோருக்கு முறையான வாழ்வியல் மாற்றம் செய்யாவிடில் கூடிய விரைவில் முழு நீரிழிவு நோயராக மாறிவிடும் வாய்ப்பு அதிகம்.
6. வெறும் வயிற்றில் 125க்கு மேலும் உணவு சாப்பிட்டு 2 மணிநேரம் கழித்து 200க்கு மேலும் இருந்தால் நீரிழிவுக் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று கொள்ளலாம்.
7. Hba1c என்ற மூன்று மாத சராசரியை அளக்கும் போது அந்த இலக்கம் 5.5க்குள் இருந்தால் நார்மல் 5.5 முதல் 6.4 வரை இருப்பின் டயாபடிஸ்க்கு முந்தைய நிலை 6.5க்கு மேல் பதிவானால் நீரிழிவு என்று அர்த்தம் தங்களுக்கு நீரிழிவு இருக்குமானால் தங்களது குடும்ப மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்
-டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை
#7pointsforhealthy #HowDiagnosedDiabetes #Diabetes #DiabetesTest
Comments