மாங்காய்களை பழுக்க வைத்து உண்ணுங்கள்…. மா விவசாயி ஒருவரின் அனுபவ பதிவு


சிறுவயதில் மாங்காய்களாக வாங்கி வைகோலில் பழுக்க வைத்து, பின் பழுக்க பழுக்க உண்ட அனுபவம் உண்டு. இன்று அந்த நடைமுறை உள்ளதாக தெரியவில்லை. நேரடியாக பழங்களாக வாங்கப்படுகின்றன. இந்த பழங்கள் இயற்கையாக பழுக்க வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. 

நடைமுறை என்னவென்றால், மாந்தோப்பு உரிமையாளர் மாங்காயாகவே விற்க முற்படுவார். பலநூறு கிலோ காய்களை பழுக்க வைக்க ஏற்பாடு அங்கு இருக்காது. இந்தக் காய்கள் அருகில் உள்ள ஊர்களில் உள்ள கமிஷன் கடைகளை வந்தடையும். 

Must Read: 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கருப்பைவாய் பரிசோதனை செய்வது அவசியம்…

இங்கிருந்து ஊறுகாய்/குளிர்பான நிறுவனங்கள் மற்றும் பழக்கடைகளை தரகர்கள் மூலம் வந்தடையும். இப்படி கடைக்கு வரும் மாங்காய்களை இயற்கை முறையில் பழுக்க வைப்பது கிடையாது. எங்காவது சாலையில் பழம் விற்கும் பாட்டி செய்தால் தான் உண்டு. 

செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விரும்பி உண்ண முடியாது. சுவை இருக்காது. உடம்பிற்கும் தொந்தரவு வரும். இப்படியாக இன்றைய தலைமுறை பிள்ளைகள் பருவகால பழமான மாம்பழம் உண்ணும் பழக்கம் இல்லாமல் போகிறார்கள். ஆகையால், மாங்காயாக வாங்குங்கள். பழுக்க வைத்து பழகுங்கள்.

மாங்காய்களாக வாங்கி பழுக்க வைத்து உண்ணுங்கள்அடுத்ததாக மாம்பழத்தின் விலை நிர்ணயம் பற்றி பார்ப்போம். முதலில் கூறிய விற்பனை முறையில் மாந்தோட்டம் வைத்திருப்பவர் விலையை நிர்ணயம் செய்வதில்லை. கமிஷன் கடையில் ஏலம் விட்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அன்றைய வரவு-தேவை (Supply-Demand) அடிப்படையில் தான் விலை கிடைக்கும். 

இந்த விற்பனை விலையில் நேரடியான கழிவுகள் இவை :

1. காய் பறிப்பு கூலி 

2. வண்டி வாடகை 

3. காய் கொண்டு செல்ல Tray 

4. இறக்கும் கூலி 

5. 10% கமிஷன் 

6. மாங்காயின் மொத்த எடையில் சிறிது கழிவு

இறுதியாக, நீங்கள் கிலோ ஒன்றிற்கு ரூ 40 க்கு வாங்கும் கிளிமூக்கு/கல்லாமை மாங்காய், தோட்ட உரிமையாளருக்கு கிடைப்பது அதிகபட்சம் ரூ15 மட்டுமே. இதன் காரணமாக மாந்தோட்ட உரிமையாளர்கள் உற்பத்தியில் அதிகரிக்க முற்படுவார். 

Must Read: கொல்லிமலையும் முடவாட்டுக்கால் கிழங்கும்…

இதற்காக பெரும்பாலும் செயற்கை மருந்துகள் பூ தங்குவதற்காக, பிஞ்சு நிற்பதற்காக பயன்படுத்துவார்.  இப்படியாக உணவு நஞ்சாகப்படுகிறது. இதுவே பெரும்பாலான நம் அடிப்படையான உணவு உற்பத்தி மற்றும் சந்தையின் நிலை. 

இதன் காரணமாகவே நாங்கள், நேரடி விற்பனை மற்றும் மதிப்பு கூட்டலாக ஊறுகாய் மற்றும் தொக்கு செய்கிறோம். இந்த கருத்துகளை புரிந்து உடன்படுவோர், இயற்கையாக விளைவிக்கப்பட்ட மாங்காய்கள் தேவை எனில் எங்களை தொடர்பு கொள்ளவும் 

-நதிவனம், பாலமேடு 9444312095 / 9791512095

#mango #rawmango #mangofruit #mangofarmer

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 


Comments


View More

Leave a Comments