அசைவ குழம்புடன் ஐந்து ரூபாய்க்கு புரோட்டா


உணவு சேவை என்பதே ஒரு மகத்தான சேவைகளில் ஒன்று. உணவு விடுதி நடத்துவோர், மெஸ் நடத்துவோர், ரெஸ்டாரெண்ட் நடத்துவோர் உணவு சேவையின் அங்கமாக திகழ்கின்றனர்.

மற்ற வணிகத்தைப் போல உணவு வணிகத்திலும் லாபம் வரவேண்டும் என்று பலர் நினைப்பதில்லை. குறைந்த விலைக்கேனும் தரமான உணவை மக்களுக்கு வழங்குவோம் என்ற எண்ணத்தில் பலரும் மிக குறைந்த விலை உணவகங்களை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் மாவட்டத்துக்கு இரண்டு பேர் ஒரு ரூபாய் இட்லி என்றோ 10 ரூபாய் சாப்பாடு என்றோ மலிவு விலைக்கு உணவு விற்பனை செய்வதை இன்றைக்கும் நாம் காணமுடிகிறது.

புதுச்சேரி மாநிலம் புதுச்சேரி நகரில் ஒருவர் 5 ரூபாய்க்கு புரோட்டா விற்பனை செய்கின்றார். அதுவும் அசைவ குழம்புகளுடன் வழங்குகிறார். 20 ரூபாய் இருந்தால் இந்த உணவகத்தில் வயிறார சாப்பிட முடியும்.

புதுச்சேரி கோட்டகுப்பம் எனும் பகுதியில்தான் நியூ கவி ஹோட்டல் செயல்படுகிறது. இந்த கடை 5 ரூபாய் புரோட்டா கடை என்றே அழைக்கப்படுகிறது. காலை ஏழு மணி முதல் கடை செயல்படுகிறது. அன்றாட கூலித்தொழிலாளர்கள் இந்த உணவகத்தில் விரும்பி உணவு உண்கின்றனர். அவர்களுக்கு ஏற்ற விலையில் தரமான அசைவ உணவுகள் விற்கப்படுகின்றன. கோட்டைக்குப்பம், சோலை நகர் பகுதியில் நியூ கவி ஹோட்டல் செயல்படுகிறது.

 


Comments


View More

Leave a Comments