தொண்டை மண்டல இயற்கை விவசாயிகளின் தன்னெழுச்சி பெருவிழா


 தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. ஆங்காங்கே விவசாயிகள் தங்களுக்கு தாங்களே ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். அப்படி ஒரு விவசாய குழுதான், தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் குழுவாகும். இந்த குழு பாரம்பர்ய அரிசி மற்றும் உணவுத்திருவிழாவை வரும் ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்கள் நடத்துகிறது. இந்த  தன்னெழுச்சி  பெருவிழாவுக்கு குடும்பத்தோடு வருகை தரும்படியும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த திருவிழாவில் மாபெரும் கிராமியத் திருவிழா, கால்நடைகள் கண்காட்சி, பாரம்பர்ய நெல், அரிசி சந்தையும் இடம் பெறுகின்றன. விழாவில் பங்கேற்பவர்களுக்கு உணவுடன் அனுமதி இலவசம். 

குறிப்பாக வருங்கால சமூகமான குழந்தைகளை கட்டாயம் அழைத்து வரும்படி விழாக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன் மூலம் இப்போதைய தலைமுறையினருக்கு நம் பாரம்பரிய வாழ்வியலை கண்டுணரும் பொன்னான வாப்ப்பை, அவ்விளம் தளிர்களுக்கு ஏற்படுத்தி தரமுடியும் என்று குறிப்பிட்டுள்ளனர். 

 உண்ணும் உணவுகளாலே, உடல் வளர்க்கப்படுகின்றது எனும் வாழ்வியலின் அடிப்படை தத்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய காலத்தின் கட்டாயம் நம்மை , இயற்கை வாழ்வியல் பாதையில் பயணிக்க அழைக்கின்றது. இயற்கை வாழ்வியலுக்கு திரும்புவோம், பிணியில்லா சமூகம் படைத்திடுவோம் என இந்த திருவிழாவுக்கு வரும்படி போளூர் அர்வின் ஃபார்ம்ஸ்  அனைவரையும் அழைக்கிறது. 

விழா நடைபெறும் இடம்; கே.எம். இயற்கை வழி வேளாண் பண்ணை, தக்காங்குளம் கிராமம், ஆற்காடு வழி, ராணிப்பேட்டை மாவட்டம். மொபைல் எண்; 9245114321

-பா.கனீஸ்வரி 

#ThondaiMandalam  #OrganicFarmers  #FoodFestival  #FoodNewsTamil


Comments


View More

Leave a Comments