‘நலமும் நளபாகமும்…’மரு.விக்ரம்குமாரின் தொடர்…
நலமும் நளபாகமும்…’ என்ற தலைப்பில் சித்தமருத்துவர் விக்ரம்குமார் எழுதும் கட்டுரை நல்ல சாப்பாடு மாத இதழில் தொடராக வெளிவருகிறது. வாய்ப்பு இருப்பவர்கள் ‘நல்ல சாப்பாடு’ இதழை வாங்கிப் படிக்கலாம். மல்லிகை மகள், நல்ல சாப்பாடு இதழ்களில் மரு.விக்ரம்குமாரின் மூன்றாவது தொடர் இதுவாகும். தொடருக்கான அறிமுகக் கட்டுரையிலிருந்து சில பத்திகள்!.
’நலமும் நளபாகமும்…’ இந்த பதத்திற்கு பின் நமது முழு ஆரோக்கியமும் ஒளிந்துக்கிடக்கிறது. நலத்திற்கும் நளபாகத்திற்கும் இடையே பன்னெடுங்கால தொடர்புண்டு. ’உணவே மருந்து’ என்பதை ’உணவே நலம் உண்டாக்கும் பேராற்றல்’ என்றும் சொல்லலாம். அதுவே நலமும் நளபாகமும்!
Must Read:ஈரோடு மாநகரில் வரும் 26ம் தேதி முருங்கை பயிரிடுதல், மதிப்புக்கூட்டல் பயிற்சி
நலம் என்ற ஒற்றைச் சொல்தான் நம்மை எவ்வளவு ஆனந்தப்படுத்துகிறது. ’நலமோடு வாழ்தல்’ என்பது அவ்வளவு பெரிய வரம்! இக்காலத்தில் நலமோடு வாழ சற்று மெனக்கெடுவதும் அவசியமாகிறது. அதுவே அக்காலத்தில் நலம் என்பது வலுவான வாழ்க்கை முறையால் பெரிய மெனக்கெடல் இல்லாமல் கட்டமைக்கப்பட்டிருந்தது. நலத்திற்கான சாவி எங்கோ ஒளித்து வைக்கப்பட்ட இரகசியம் அல்ல. நாம் வாழும் பாரம்பரிய வாழ்க்கை முறையே நலத்திற்கான சாவி! ’உடனடி நலம்’ என்பதை விட ’நீடித்த நலமே’ ஆரோக்கிய வாழ்விற்கான அடிப்படை என்பதை மக்கள் உணரத் துவங்கிவிட்டால் நோயில்லா சமுதாயம் சாத்தியம்.
#FoodArticle #FoodNews #FoodAndHealth #DRVikramKumar
Comments